செய்திகள்

ஐபிஎல் 2022 ஏலம்:- முழு விபரம்…

2022ம் ஆண்டு ஐபிஎல்-க்கான மெகா ஏலம் தொடங்கியுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சிகர் தவான், பஞ்சாப் கிங்ஸ் அணியால் ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவர் இதற்கு முன்பு டில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2-Shreyas Iyer -ரூ.12.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

3-ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆஸ்திரேலியா வீரர் பாட் கம்மின்ஸ்-ஐ, ₹7.25 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

4-ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை, ₹5 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

5-ஐபிஎல் மெகா ஏலத்தில் தென்னாப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடாவை, ₹9.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி!

6-ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் முகமது ஷமி, ₹6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி!

7-ஆர்சிபி அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் அர்ஷல் படேல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு டில்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

8-மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் ஆல்-ரௌண்டர் பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.4.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

9-இந்திய அணியைச் சேர்ந்த முன்னாள் ஆல்-ரௌண்டர் சுரேஷ் ரெய்னா, எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

10-இந்திய அணியின் முன்னாள் பேட்டர் ராபின் உத்தப்பா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

11-ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், டில்லி கேப்பிடல்ஸ் அணியால் ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *