சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு
இந்தியா முதல் உலகம் முழுக்க இருக்கும் சினிமா ரசிகர்களும், நடிகர்களும், இயக்குனர்களும் ஒவ்வொரு ஆண்டும் கோவா திரைப்பட விழாவில் கலந்து கொண்டு அனைத்து படங்களையும் பார்ப்பார்கள்.
சர்வதேச திரைப்பட விழா
கடந்த ஆண்டு நடந்த கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 76 நாடுகளும், 200 படங்களும் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. விருதுகளும் கொடுக்கப்படும். இந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சினிமா காதலர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு தான் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருதை அமிதாபச்சன் வழங்கினார். கொரோனா சூழலில் உலக நாடுகளில் இயக்குனர்கள், நடிகர்கள் என்று பலரும் வருவதற்கு சிக்கல் எழும் என்பதால், கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 16 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளன.
கோவா சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது
இந்த முடிவு மத்திய செய்தி ஒலிபரப்புத் துறையும், கோவா மாநில அரசும் கலந்து ஆலோசித்த பிறகே எடுக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் திரைப்பட துறை சார்பில் வருடந்தோறும் நடத்தப்படும். கோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்க இருந்த நிலையில் ஒரு சூழல் தற்போது 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க : அழகிய சிருக்கி அருவா மூக்கி…பாடல் க/பெ ரணசிங்கம்
இது குறித்து வைகோ எம்பி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உரிய விதிகளை பின்பற்றி நவம்பரில் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். கொரோனாவால் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.