இயக்குனர்களின் சிகரம் கே. பாலச்சந்தர் என்றும் இன்றும்
தனித்துவமாக விளங்கும் இயக்குனர்களின் முன்னோடியாக திகழும் கே பாலச்சந்தருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இயக்குனர் கே.பாலச்சந்தர் 9 ஜூலை 1930 இல் பிறந்த கைலாசம் பாலச்சந்தர் 1964 திரைக்கதை எழுத்தாளராக திரையுலகில் நுழைந்தார். அடுத்த வருடமே நீர்க்குமிழி என்ற படத்தின் மூலம் இயக்குனராக பயணத்தைத் தொடங்கினார்.
34 வயதில் திரையுலகத்திற்கு வந்த இவர் தன்னுடைய கடைசி மூச்சு வரை திரையுலகிலேயே வாழ்ந்துள்ளார். 50 வருட திரையுலக வாழ்க்கை என்ற கர்வத்திற்கு உரியவர். பல படங்கள் இயக்கிய இவர் முத்து முத்தான நடிகர்களை திரையுலகிற்கு கண்டு தந்துள்ளார்.
நாகேஷ், சுஜாதா, ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கமல்ஹாசன், ஜெயப்பிரதா, சிரஞ்சீவி, ஜெயசுதா, ரேணுகா, பிரகாஷ்ராஜ், சரிதா, நாசர், ரமேஷ் அரவிந்த், விவேக், டெல்லி கணேஷ், மதன் பாபு, சார்லி இவர்களை அறிமுகப்படுத்தும் பெரிய பங்கு கே. பாலசந்தர் உடையது. அதுமட்டுமல்லாமல் பல நடிகர்களின் திரையுலக வாழ்க்கையை ட்யூன் செய்துள்ளார். தமிழ் திரை உலகில் மூத்த நடிகர்களான நாகேஷ், முத்துராமன், சௌகார் ஜானகி, ஜெமினி கணேசன் போன்றவர்களுடன் இணைந்து பணி புரிந்துள்ளார்.
கதாநாயகன்-கதாநாயகி காம்பினேஷன் கள் பெரிதாக பேசப்படும் திரையுலகில் மூன்று ஆண்களின் காம்பினேஷன் ஹிட்டானது இவரால்தான். 1970களில் ரஜினிகாந்த் கமலஹாசன் கே பாலச்சந்தர் இவர்கள் மூவரின் இணைப்பு தமிழ் சினிமாவில் பல அருமையான படைப்புகளை தந்தது.
தென்னிந்திய பிற மொழிகளான கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகளிலும் பல நடிகர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஆனால் படங்கள் பெரும்பாலும் தமிழ் மொழியிலேயே இறக்கியுள்ளார்.
ரஜினிகாந்திடம் ஊடகங்கள் கேட்க முடியாத பல கேள்வியை கே பாலச்சந்தர் ஒரு விழா மேடையில் கேட்டார். அதில் முக்கியமான ஒன்று ‘ஏன் சிகரெட் பிடிக்கிறீங்க ரஜினி’ என்று வினவ ‘நீங்கதானே சார் சொல்லி கொடுத்தீர்கள்’ ரஜினியும் பதிலளிக்க அதற்கு கே. பாலச்சந்திரன் தடாலடியான பதில் இதோ ‘சிகரெட்டை விதவிதமா பிடிக்க தான் சொல்லிக் கொடுத்தேனே தவிர சிகரெட் பிடிக்க நான் சொல்லி தரல’.
இவரின் கதாநாயகிகள்
புரட்சிக்கவிஞர் பாரதியாரின் புதுமைப்பெண் பற்றிய சிந்தனைகள் இவரைத் தாக்கி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் இவர் பட்டியலில் பல.
பாரதி கண்ட புதுமைப்பெண் இவளோ என்று பாலசந்தரின் கதாநாயகிகள் திகழ்ந்தன. கே. பாலச்சந்தர் படத்தில் வரும் கதாநாயகிகள் தனித்துவமாக யாரையும் எதிர்பார்க்காமல் சுயமரியாதையுடன் வாழும் கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டு இருப்பார்கள்.
பாராட்டு
கலைமாமணி, பத்மஸ்ரீ, தாதாசாகேப் பால்கே விருது மற்றும் ஏ என் ஆர் தேசிய விருது போன்றவை இவரின் போற்றத்தக்க விருதுகள். கே பாலச்சந்தரின் வாழ்க்கையைப் பற்றி ஆவணப்படம் தயாராகியுள்ளது.