பாகிஸ்தானில் விழுந்த ஏவுகணை- இந்திய அரசு விளக்கம்
இந்தியாவில் இருந்து சூப்பர் சோனிக் ஏவுகணை ஒன்று தனது எல்லைக்குள் நுழைந்ததாகவும், அதை சுட்டு வீழ்த்தியதாகவும் பாகிஸ்தான் குற்றச்சாட்டியது. மேலும், இந்த விவகாரம் குறித்தான விவரங்களை, ஐ.நா.வுடன் பகிர உள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
நேற்று நடந்த இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது; இது தொடர்பாக இந்தியாவும் விளக்கம் அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் DG ISPR டைரக்டர் ஜெனரல் பாபர்-இப்திகார் கூறியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ள இந்திய அரசு; தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானில் தவறுதலாக ஏவுகணை விழுந்ததாக இந்தியா அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இச்சம்பவம் மிகுந்த வருத்தமளிப்பதாக உள்ளது; இதனால், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது நிம்மதி அளிக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.