டிஎன்பிஎஸ்சி இந்திய வைசிராய்கள் வினா-விடை
இந்திய வரலாற்றில் வைசிராய்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். இவர்களின் பங்கு இவர்கள் நடவடிக்கைகள் இன்றைய காலகட்டத்திலும் நமக்கு பயன்பாட்டில் மேம்படுத்தப்பட்டு காணப்படுகின்றது.
இத்தகைய குறிப்பினைப் தேர்வர்கள் படித்து தெரிந்து கொண்டால் தேர்வில் கேள்விகளை எளிதில் சமாளிக்கலாம். வைசிராய்கள் கேள்வி விடைகளாக கொடுத்துள்ளொம் அதனைப் படிக்கவும்.
1 1877 டெல்லி தர்பாரரில் விக்டோரிய மகாராணி எவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்ட
விடை: இந்தியாவின் பேரரசியாக
2 இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான உப்பு வரியை விதித்தவர் யார்?
விடை: லிட்டன் பிரபு
3 இந்தியாவில் முதன்முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையினை அறிமுகப்படுத்தியவர்?
விடை: மேயோ பிரபு 1872
4 வட்டார மொழி பத்திரிக்கை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
விடை: 1878 ஆகும்
மேலும் படிக்க: போட்டித் தேர்வுக்கான தமிழ் பாட குறிப்புகள்
5 வாய்ப்பூட்டு சட்டம் என அழைக்கப்படும் எது?
விடை: வட்டார மொழி பத்திரிக்கை சட்டம் அவ்வாறு அழைக்கப்படுகின்றது
6 இந்தியாவில் முதன்முதலாக தொழிற்சாலை சட்டத்தினை இயற்றியவர்?
விடை: ரிப்பன் பிரபு 1881
7 ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி கவர்னர் ஜெனரல் யார்?
விடை:கானிங் பிரபு அவர்
8 பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் வைசிராய் யார்?
விடை:கானிங் பிரபு ஆவார்
9 கொல்கத்தா மும்பை சென்னை ஆகிய பகுதிகளில் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்ட ஆண்டு?
விடை: 1857
10 சிப்பாய் கலகத்தில் பங்குகொண்ட இந்தியர்களுக்கு மன்னிப்பு கொடுத்தவர்?
விடை: கானிங் பிரபு
11 இந்திய வனத்துறை என்னை உருவாக்கியவர் யார்?
விடை: லாரன்ஸ் பிரபு 1864 -1868
12 1858 முதன்முதலில் வருமான வரியினை அறிமுகம் செய்தார்?
விடை:கானிங் பிரபு