மனிதாபிமானம் நிறைந்த இந்திய இராணுவம்!
சீன ராணுவம் இந்திய எல்லையில் லடாக் பகுதியில் நுழைந்தது. அதனை நடத்தும் இரு நாடுகளிடையேயான சூழல் கடினமானப் பதற்ற சூழல் இருக்கின்றது. இந்த நிலையில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் ஒரு பெண் உட்பட 3 பேர் கடும் குளிரில் மாட்டிக் கொண்டனர்.
இத்தகவலை அறிந்த இந்திய இராணுவம் 17 ஆயிரத்து 500 அடி உயர மலையில் தவித்து வந்த சீனர்கள் மூவரை இந்திய ராணுவம் மனிதத் தன்மையுடன் மீட்டு அவர்களை உபசரித்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அனுப்பியது. இந்தியா சீனா இரு நாடுகளுக்கு இடையே எப்போது பதற்றமான சூழல் தணியும் என்று காத்திருக்கும் அந்த நிலையில் சீனர்கள் ஒருவரை மனிதாபிமானத்துடன் இந்தியா காப்பாற்றி அடைக்கலம் கொடுத்து இருக்கின்றது.
போர் என்று வந்தால் உயிரை எடுக்கும் இந்திய ராணுவம் போருக்கு முன்பு எப்போதும் அமைதியும் பொறுமையும் சூழ வாழ்கின்றது அதன் பொறுமையையும் மற்றொரு முகத்தையும் இன்று காணமுடிகின்றது. சீனா கால்வான்ப் பகுதியில் தாக்குதல் நடத்தியது அப்போது சீனர்களை எதிர்த்துக் இயங்கும் என்றும் அவர்கள் தரப்பில் அதிக அளவில் பாதிப்பை உண்டு செய்தது அதே போன்று இக்சிங்க் லாப்பாஸ் பகுதியில் அங்கும் சீனா தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்தை திசைதிருப்பக் கூட்டமாக சென்றது. இதனை உணர்ந்த இந்திய ராணுவம் மலையேறி 16 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை வெறும் மூன்று மணி நேரத்தில் அடைந்தது.
சீனா எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்த முற்பட்டால் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது இந்தியா. ஆனால் மனிதாபிமானம் நிறைந்த இந்திய இராணுவம் வழிதவறி மாட்டிக் கொண்ட சீனர்களை இந்தியா மனிதாபிமானத்துடன் நடத்தியது.
வடக்கிழக்கு மாநிலமான சிக்கிம் பகுதியில் சீனர்கள் 3 பேர் திரும்பும்போது 17 ஆயிரத்து 500 அடி உயரத்தில் மாட்டிக்கொண்டனர். இந்திய ராணுவத்தினர் ஆபத்தான இந்த சூழலில் ஆக்சிஜன் கொடுத்து, உணவு கொடுத்தும் குளிரை தாங்குவதற்காகக் உடைகள் கொடுத்திருக்கின்றனர் அவர்கள் மீண்டும் கிளம்பி செல்ல அவர்களுக்கு உதவியது. இந்தியா மகத்தான மானுட நாடு எப்போதும் மனித நேயத்தை மட்டுமே தன்னுள் கொண்டிருக்கும் நாடு.
தற்பொழுது இரு நாடுகளுக்கும் நிலவும் பதற்றமான சூழலில் யாராக இருந்தாலும் எதிர் நாட்டு மக்களைச் சந்தேகிப்பார்கள், இந்திய இராணுவத்திற்கும் அது தெரிந்திருக்கும் ஆனாலும் இந்திய இராணுவம் அனைத்தும் விசாரித்து உதவியப் பாங்கு உண்மையில் மெய் சிலிர்க்கச் செய்கின்றது.