செய்திகள்தேசியம்விளையாட்டு

ஒலிம்பிக்கில் வெள்ளி வேட்டை மீராபாய்

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று மீராய்பாய் இந்தியாவின் சார்பாக பதக்க வேட்டையை தொடங்கியுள்ளார். இந்தியா சார்பாக பளுதூக்குதல் பிரிவில் சாதித்துக் காட்டியுள்ளார் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 49 கி.கி பிரிவில் பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க வேட்டை:

இந்தியாவின் பதக்க வேட்டையானது இன்று முதல் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவின் சார்பாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மீராபாய் சானு பளுதூக்குதல் பிரிவில் ஸ்டான்ச் பிரிவில் 87 கிலோ கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 115 கிலோ என 202 கிலோ தூக்கி மீராபாய் வெள்ளி வென்றுள்ளார்

பளுதூக்குதலில் இரண்டாம் பதக்கம் :

பளுதூக்குதலில் கர்ணம் மல்லிஸ்வரிக்குப் பிறகு மீராபாய் சானு பெற்ற வெள்ளியானது இந்தியாவுக்கு இரண்டாம் பதக்கமாக பட்டியிலில் இடம் பெற்றுள்ளது. 2000 ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக பெற்ற பதக்கத்திற்குப் பின் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா இந்த பிரிவில் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

நாடே கொண்டாட்டம்:

மீராபாய் சானுவின் வெற்றியை நாடே கொண்டாடி வருகின்றது அந்த வகையில் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் மீராபாய்க்கான வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன, சிலேட்டுக்குச்சியும் இந்த கொண்டாட்டத்தினை தொடங்கியுள்ளது.

இந்தியாவை முந்திய சீனா:

பளுதூக்குதலில் இந்தியாவை முந்துவதில் முதல் ஆளாய் சீனா உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஆமாங்க இந்த போட்டியில் முதலிடம் பிடித்தது சீனாவின் ஹோ ஜிஹூய் 210 மொத்தம் தூக்கி தங்கம் வென்றுள்ளார். இந்தோனிசியாவின் ஐசா விண்டி கேன்டிகா 194 கிலோ தூக்கி வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *