செய்திகள்தேசியம்ராணுவம்

இந்தியா சீனா பேச்சுவார்த்தை என்னதான் முடிவு!

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எல்லையில் ஏற்படுத்திவரும் சிக்கலை இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது குறித்துப் பேசி சீனாவை கண்டித்திருக்கிறார். மாஸ்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சீனாவின் சார்பில் பாதுகாப்பு அமைச்சர் வே ஃபெங் இந்தியாவின் சார்பில் ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றார்.

மே மாதம் முதல் சீனா தொடர்ந்து இந்திய பகுதிகளை ஆக்கிரமித்து வருகின்றது. ஒப்பந்தத்தை மீறிச் சீனா தனது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வது சரியல்ல இந்தியா இதற்குத் தக்க பதிலடி கொடுக்கும்.

இந்தியாவின் இறையாண்மையின் பாதுகாப்பு குலைக்க யாருக்கும் உரிமை இல்லை. சீன பாதுகாப்பு துறை பேச்சுவார்த்தைக்கு அழைத்துத் தன் படையின் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது. இந்தியாவின் பொருமையை ம் மீண்டும் மீண்டும் சீண்டுவது அவ்வளவு நல்லதல்ல என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

லடாக் எல்லையில் இந்தியா சீனா இரு நாடுகளுக்கிடையேயான ராணுவ பிரிகேடர் கமாண்டர் நிலையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இந்தியா சீனா எல்லை பிரச்சினைகள் இருதரப்பிலும் பெரும் பதற்றத்தை உண்டு செய்திருக்கின்றது. சீனா இந்தியா இருநாடுகளும் எண்ணையில் தொடர்ந்து படைகளை நிறுத்திப் பதட்டத்தை மேலும் அதிகரிக்கின்றன.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அமைச்சர்களுக்கான மாநாட்டின்போது இருநாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு துறை அமைச்சர்கள் பேசினார்கள். சுமார் இரண்டு மணி நேரம் இந்தியா-சீனா அமைச்சர்கள் பேசினார்கள் பேசியும், ஆலோசனைகள் நடத்தியும் பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை நிறுத்த வேண்டுமென இருதரப்பும் பேசி இருந்திருக்கின்றனர்.

இதற்கு அடுத்து தொடர்ந்து சீன ராணுவத்தின் பிரிகேடர் எகமாண்டர் இந்திய ராணுவத்தின் பிரகேடர் கமாண்டோக்கள் இடையேயான பேச்சுவார்த்தை இன்று நடத்தப்பட்டது. சுமார் 4 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. கல்வானின் பள்ளதாகிள் சீனர்கள் தாக்கியது இந்திய தரப்பில் 20 பேர் வீர மரணம் மேலும் இந்தியாவிலிருந்து பதில் தாக்குதல் சீன தரப்பில் 40 பேர் வீரமரணம் ஆகிய அனைத்தும் இருநாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை அதிகப்படுத்தி இருக்கின்றது.

கடந்த வாரம் சீன ராணுவம் பாங்காங் ஏரி பகுதியில் அத்துமீறி நுழையப் பார்த்தது அதனை இந்திய இராணுவம் தடுத்து நிறுத்தி அவற்றை இந்திய ராணுவம் கைப்பற்றியது. இது போன்ற நடவடிக்கைகளில் இரு நாடுகளுக்கு இடையே அமைதியை குலைத்து இருக்கின்றது என இரு நாடுகளின் ராணுவத்தினரும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றிப் புகார்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர். இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கும் அரசு விரைந்து செயல்படும் என்று தகவல் கிடைக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *