அதிகரித்து வரும் கொரோனா ஆடிபோகும் இந்தியா
இந்தியாவில் நாளொன்றுக்கு லட்சக் கணக்கானோர் கொரோனா வீதம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதியாக 92 ஆயிரத்து 0 71 பேர் என தகவல்கள் கிடைத்திருக்கின்றது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 48.46 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர் .
இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடின்றி பெருகி வருகின்றது. தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை தினசரி நாட்டில் நோய்தொற்று எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டி இருக்கின்றது. கொரோனா எண்ணிக்கை பாதிக்கப்பட்டவர்கள் வீதமும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை வீதமும் ஒரே மாதிரியாக இருப்பதால் அரசு சற்று நிம்மதி பெருமூச்சு விட்டு இருக்கின்றது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் 48 லட்சம் பேருக்குக் கொரோனா உறுதியாக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 92,071 மேற்பட்டோர் கொரோனா உறுதியாகி சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1136 பேருக்கு மேல் மரணமடைந்துள்ளனர்.
இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பால் குணமானோர் எண்ணிக்கை 77512 பேர் ஆகும். மொத்தம் 37, 80,108 பேர் இந்தியாவில் கொரோனா சிகிச்சை முடிந்து குணமாணவர்கள் எண்ணிக்கை பெருகி இருக்கின்றது. கொரோனா காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1.6 சதவீதமாக இருக்கின்றது. நாட்டில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 28 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.