உருமாறிய கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பு
பிரிட்டனில் அதிவேகமாக பரவிவரும் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. டிசம்பர் 31 முதல் மத்திய அரசு பிரிட்டனிலிருந்து வரும் விமான சேவைகளுக்கு தடை விதித்தது. நம் நாட்டில் இதுவரை உருமாறிய கொரோனா 5 பேருக்கு இருந்தது கண்டறியப்பட்டன.
- அதிவேகமாக பரவிவரும் உருமாறிய கொரோனா வைரஸ்.
- இந்தியா வந்த பயணிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனை.
- கொரோனா தொற்று பரிசோதனையில் உருமாறிய கொரோனா.
பயணிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனை
தற்போது 20 ஆக அதிகரித்து தற்போது மேலும் 14 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளன. நவம்பர் கடைசியிலிருந்து டிசம்பர் மூன்றாவது வாரம் வரை இந்தியா வந்த பயணிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 113 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
அனுப்பி வைக்கப்பட்ட நகரங்கள்
டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், புனே, புவனேஸ்வர், கொல்கத்தா போன்ற நகரங்களில் கொரோனா மாதிரிகள் அனைத்தும் பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொரோனா தொற்று பரிசோதனையில் ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா என்பதை மத்திய அரசு தெரிவித்தது.
தமிழக சுகாதாரத்துறை
தற்போது மேலும் 14 பேருக்கு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளன. பாதிக்கப்பட்ட நபரை தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை உட்பட இதுவரை 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.