ஆன்மிகம்ஆலோசனை

கௌரி விரதம் சிறப்பு பற்றி தெரியுமா

ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் கௌரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 21 கௌரி விரதம் கொண்டாடப்படுகின்றன. இந்த நாளை தவறவிடாதீர்கள். விநாயகர் சதுர்த்தி எப்போது கொண்டாடப்பட்டாலும் அதற்கு ஒருநாள் முன் கொண்டாட்டம் விமர்சையாக கொண்டாடப்படும்.

நம்மில் பலரும் விநாயகர் சதுர்த்தி தினம் மிகக் கோலாகலமாக பல்வேறு பலகாரங்களை படைத்து கொண்டாடுகிறோம். கர்நாடகாவில் மிகப் பிரபலமாகவும், தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும் இந்த கௌரி பூஜை கொண்டாடப்படுகின்றன. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ விநாயகர் சதுர்த்தி அன்று ஷோடசோபசார பூஜை வழிபாடு செய்யலாம்.

ஒருமுறை பார்வதி தேவி நீராடச் செல்வதற்கு கூறி யாரையும் உள்ளே அனுமதிக்காது என நந்தியிடம் கூறி காவலுக்கு வைத்து விட்டு சென்றது நாம் அனைவரும் அறிந்ததே. அங்கு வந்த சிவபெருமான் உள்ளே செல்ல பார்த்தார். அவரை தடுத்த நந்தி பார்வதிதேவி யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என கூறியும் பார்வதியின் மணாளன் என்பதால் இந்த கட்டளை என்னை தடுக்காதே என்று கூறி அதையும் மீறி உள்ளே சென்றார்.

உள்ளே சென்ற ஈசன் பார்வதி தேவி அமர்ந்திருப்பதை பார்த்தார். நான் யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என நந்தியிடம் கூறி இருந்தேனே என்றார் பார்வதி. ஆனால் நந்தி என் சேவகன் அவன் எப்படி என்னை தடுக்க முடியும் என்று கூறினார். இதை கேட்ட பார்வதி எனக்கென ஒரு மெய்க்காப்பாளன் வேண்டும் என எண்ணி தான் பூசுமஞ்சள், சந்தனத்தால் உருவம் பிடித்து உயிர் கொடுத்தார். அவரை தற்போது கணபதி என கொண்டாடப்படுகிறார்.

கௌரி கொண்டாட்டம் ஏன் கணபதிக்கு உயிர் கொடுத்த கௌரியை கொண்டாடும் விதமாக இந்த கௌரி விரதத்தை கோலாகலமாக கொண்டாடுகிறோம். பூஜை விதிகள் திருமணமான பெண்கள் இந்த விரதம் மற்றும் பூஜை செய்வது வழக்கம். மஞ்சள் நிறத்தில் கடைகளில் விற்கப்படும் பார்வதி உருவத்தை வாங்கி ஒரு கலசத்தின் மீது வைத்து வழிபடலாம் அல்லது நாம் மஞ்சளை அரைத்து அதை அம்மன் உருவமாக தேங்காய் மீது உருவாக்கலாம்.

இதனை கலசத்தின் மீது வைத்து பூஜை செய்தும் வழிபடலாம். கலசத்தில் மஞ்சள் கலந்த நீர் வைத்து அதன் மீது மாவிலை வைத்து அம்மன் உருவம் பிடித்த தேங்காயை அதன் மீது வைத்து அலங்கரித்து பூஜிக்கலாம். இந்த விரதத்தை கடைபிடிப்பதன் மூலம் குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு கணபதி போன்ற நல்ல அறிவு செல்வம் மிகுந்த குழந்தை பேறு கிடைக்கும்.

இந்த பூஜை செய்பவர்கள் மறுநாள் விநாயகரை வழிபட்டு அதற்கு அடுத்த நாள் மறுபூஜை போட்டு பூஜையை முடித்துக் கொள்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *