ஆள்மாறாட்டம் நடந்ததாக புகார் – அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
கடந்த வாரம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பொங்கல் விழாக்களில் நடைபெற்றன. இப்போட்டியில் வெற்றி பெற்றவருக்கு முதல் பரிசாக காரை கொடுக்க இருந்தது. இதில் ஆள்மாறாட்டம் நடந்ததாக மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்குமாறு இரண்டாவது பரிசை வென்றவர் புகார் கொடுத்துள்ளார்.
முறைகேடு புகாரின் பேரில் ஆள்மாறாட்டம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வீடியோ பதிவுகள் மற்றும் முன்பதிவு விவரங்களை குறித்து ஆய்வு செய்து பரிசை வழங்க வேண்டுமாறு புகார் அளித்தவர் தெரிவித்தார்.
இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதற்கு அறிவிப்பு பலகை மூலம் காளைகளை பிடித்தவர்கள் எத்தனை காளைகளை பிடித்தார்கள் என்ற விவரத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மேலும் விழா கமிட்டியினர் உடன் விசாரணை நடத்திய பிறகு உரிய தீர்வு எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முறைகேடு குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆள்மாறாட்டம் செய்த நபர்கள் பரிசோதனை செய்யாமல், முன்பதிவு எதுவும் செய்யாமலும் களத்தில் இறங்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளன.