நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க… தினமும் கொடுங்க..!!
மாவுசத்து, புரத சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாது பொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்சத்து என, உடல் இயக்கத்து க்கு தேவையான அனைத்து சத்துக்களும் தேங்காயில் உள்ளன. கொப்பரை தேங்காய் ஆண்மையை அதிகரிக்கும். தேங்காய் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல வழிகளில் பயன்படுத்தபடுகிறது.
தீப்புண்ணுக்கு தேங்காய் எண்ணெய் தடவி வந்தால், விரைவில் குணமடையும். தேமல், படை, சிரங்கு தயாரிக்கும் மருந்துகளில் தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. கூந்தல் வளர்ச்சிக்கும் தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக்காக உள்ளது. தேங்காய் வெளிப்புற ஓடிலிருந்து தயாரிக்க படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதியை குணப்படுத்தும். பாதரச நஞ்சு, சேராங் கொட்டை நஞ்சு, போன்றவற்றிற்கு தேங்காய் பால் நஞ்சு முறிவாக உள்ளது.
தேங்காய் எண்ணெயில் தைலங்கள்
தேங்காய் எண்ணெயில் தயாரிக்கப்படும் தைலங்கள், பல்வேறு நோய்களை குணப்படுத்துகிறது. நாள்பட்ட தீராத புண்ணுக்கு மத்தம் தைலம், தலையிலுள்ள பொடுகுக்கு பொடுதலை தைலம், தோல் நோய்க்கு கரப்பான் தைலம், வாத வழியை குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்கு உபயோக படுத்தும் நீலபிரியங்கா தைலம், சோரியாசிஸ் பயன்படும் வெப்பாலை தைலம் போன்ற தைலங்களில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தபடுகிறது.
தேங்காய் பால் சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும். தேங்காய், கசகசா, பால், தேன் சேர்த்து பால் எடுத்து கொடுத்தால் வறட்டு இருமல் கட்டுப்படும். தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து குடிக்க வயிற்று புழுக்களை அப்புறப்படுத்தும். குழந்தை நல்ல நிறமாக பிறக்க தேங்கா பூவை சாறாக்கி கர்ப்பிணிக்கு கொடுக்கும் பழக்கமும் உள்ளன.
தேங்காய் பால்
தேங்காயை வெறும் வாயில் மென்று தின்பதால் வாய்ப்புண், எரிச்சல் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். உடலின் சூட்டை தணிப்பதோடு, தோலை மிருதுவாகவும் தேங்காய் பயன் படுகிறது. தேங்காய் பாலை தலைக்கு வாரம் இருமுறை தேய்த்து குளித்து வர முடி உதிர்வு கட்டுபடும். மிருதுவாக வும், சருமம் பளபளப்பாகவும் காட்சியளிக்கும். இதிலுள்ள பேட்டிஆசிட், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, உடல் எடையை குறைக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கின்றனர்.
இதய நோயாளி, சர்க்கரை நோயாளி இதை தொடவே கூடாது. இதில் கொழுப்புகள் அதிகம் போன்ற கட்டுக்கதை பிரசாரத்துக்கு இந்த பதிவு பெரும் சவாலாக விடுத்துள்ளது. உடலின் கொழுப்பை கரைக்கும் காப்ரிக் ஆசிட் மற்றும் லாரிக் ஆசிட் இரண்டு அமிலங்களும், தேங்காயில் போதிய அளவில் இருப்பதாக ஆய்வில் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.