ஆரோக்கியம்வாழ்க்கை முறை

இரண்டு குழந்தைகளை பெற்றெடுக்க விருப்பமா இதைத் தெரிந்து கொள்ளுங்கள்

அன்றைய காலகட்டத்தில் குடும்பத்தில் இரண்டு, மூன்று பிள்ளைகள், ஐந்தாறு பிள்ளைகள் என்று இருந்தனர். இன்றைய சூழ்நிலையில் ஒன்றை பெற்று வளர்த்தெடுத்து அவர்களுக்குத் தேவையானதை கொடுப்பதே பெரிது என்று நினைத்துக் கொள்கின்றனர். ஒன்றுக்கு துணையாக இன்னொரு பிள்ளை வேண்டும் என்று இரு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்பவர்கள் உண்டு.

அப்படி குழந்தை பெறும் பொழுது ஒரு குழந்தை பிறந்து, இரண்டாவது குழந்தை கருத்தரிக்கும் முன்பு தகுந்த இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும். தாயும், குழந்தையும் ஓரளவு ஆரோக்கியமாக இருக்க உதவும். இரண்டு குழந்தைகளை அடுத்தடுத்து பெற்றுக் கொள்வதன் மூலம் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சிரமத்திற்கு ஆளாக நேரிடலாம்.

ஆறு மாதங்களுக்குள் கருத்தரிக்க பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை விட 6 – 15 மாதங்களுக்குள் கருத்தரிக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பு குறைவாக இருந்தாலும், பாதிப்புகள் ஏற்படுவது தெளிவாக கண்டறியப்பட்டுள்ளன. இரண்டு குழந்தைகளுக்கான இடைவெளி அதிகரிக்கும் போது பிணைப்பு குறைகிறது. தன்னுடைய இடத்தை இரண்டாவது குழந்தை எடுத்துக் கொண்டதாக நினைத்து தன்னைத் தானே முதல் குழந்தை பிரித்துக் கொள்ளும் என்று சொல்லப்படுகின்றன.

முதல் குழந்தைக்கு உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக மீண்டும் கருத்தரிப்பதற்கு முன் முதல் பிரசவத்தில் இருந்து முழுவதும் குணமடைவது அவசியம் என்று மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இரும்புச்சத்து குறைவாக இருப்பவர்கள் கவனமாக இருத்தல் வேண்டும். முதல் குழந்தை பிறந்த ஆறு மாதத்திற்குள் மீண்டும் கருத்தரிக்கும் போது குழந்தைக்கு அதிக ஆபத்தும் எடை குறையும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சராசரியாக இரண்டு வருடங்கள் இடைவெளி அவசியம். அப்போது தான் உடல் முழுவதும் குணமடைந்து அடுத்த கருத்தரிப்புக்கு தயாராகும். இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வது அவரவர்களின் விருப்பம். ஆனால் முதல் குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் இடையே இடைவெளி அவசியம். பெரும்பாலான பெண்கள் 30 வயதில் தான் முதல் குழந்தைக்கே தயாராகின்றனர். இடைவெளி எடுப்பது சிரமமான ஒன்றாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *