விளையாட்டு

கொரோனா பாதுகாப்பு வளையத்தை முறையாக பின்பற்றப்படுகிறதா ஐபிஎல் சந்தித்த சிக்கல்கள்

ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ வகுத்த முன்னெச்சரிக்கை நடை முறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்ற கேள்வி எழுந்து உள்ளன. ஐபிஎல் தொடரில் மூன்று முறை கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே கடந்து வந்த பாதையில் சூதாட்ட புகார்கள் தொடங்கி தடைகள் ஏராளம்.

கொரோனாவில் இருந்து சிஎஸ்கே அணியினர் மீண்டு விரைவில் பயிற்சியை தொடங்கி ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக முடிக்கும் தருணத்தை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் 5 நாட்கள் பயிற்சிக்குப் பின் தனி விமானம் மூலம் துபாய் செல்வதற்கு முன்னதாக அணியினருக்கு இருமுறை கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டன.

இவற்றில் வீரர்கள் உள்ளிட்ட அணியினருக்கு பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. துபாயை அடைந்தவுடன் சென்னை அணியினரை வரவேற்றவர் வீரர்களை கட்டித் தழுவியது அதிர்ச்சியை ஏற்படுத்தின. பிறகு ஆறு நாட்கள் தனிமைப்படுத்துதல் தொடங்கி அணியினருக்கு முதல் மூன்றாம் மற்றும் ஐந்தாம் நாட்களில் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இதில் மூன்று பரிசோதனையின் முடிவில் உதவியாளர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு பரவியது தெரியவந்ததாக அணி நிர்வாகம் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளன. கொரோனா பெரும் தொற்று காலத்தில் இந்தியாவில் பயிற்சி முகாம் நடத்திய ஒரே ஐபிஎல் அணி சிஎஸ்கே தான்.

அதுவும் கூட பாதிப்புகள் விண்ணைத்தொடும் நகரங்களில் ஒன்றான சென்னையில் பயிற்சிக் களம் அமைத்தது. தோனியின் படை அப்போது கொரோனா விதிமுறைகளை மீறி வீரர்கள் கட்டி அணைப்பதை காண முடிந்தன.

சிஎஸ்கே அணியில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதால் ஐபிஎல் நிர்வாகக் குழுவில் பாதுகாப்பு நடைமுறைகள் கேள்வி குறியாகி உள்ளன.

தொடருக்கான பயிற்சி தொடங்கும் முன்னரே பிசிசிஐ பெரும் சவாலை சந்தித்துள்ளன. ஐபிஎல் முறையாக கொரோனா பாதுகாப்பு வளையத்தை பின்பற்றப்படுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *