சமையல் குறிப்புமருத்துவம்

இரும்பு சத்துஅதிகரிக்க.. உணவில் இதை சேர்த்துக் கொள்ளுங்கள்..!!

கால்சியம், இரும்பு சத்து அதிகமாக கிடைக்கும் கீரைகளில், கீரை இதை சமைக்கும் போது மூடிபோட்டு வேக வைக்க வேண்டும். மற்ற கீரையை விட முருங்கை வேகும் நேரம் அதிகம் என்பதால் மூடி போட்டு வேகவிட வேண்டும். இதைசூப் செய்து பருகலாம். இதை வெயிலில் உலர்த்தாமல் நிழலில் உலர்த்தி போடி செய்து வைத்து கொண்டால் தினமும் சாதத்தில் நெய் விட்டு சாப்பிடவும். சிறிது சாம்பாரில் தூவி விட வாசமாக இருக்கும்.

கீரையின் சுபாவம்

கீரை தண்டின் சுபாவம் குளிர்ச்சியானது. இது விளையும் இடத்திற்கு ஏற்ப சுவை மாறுபடும். கீரை தண்டினை பருப்புடன் சேர்த்து சமைக்க சுவை கூடும். கடலை பருப்பு, பட்டாணி, காராமணி,மொச்சை சேர்த்து சமைக்கலாம். கீரை தண்டை மேல் தோல் சீவி கட் செய்து சமைக்க வேண்டும். அதிக விலை கொடுத்து மருந்துகளை சாப்பிடுவதற்கு பதிலாக விலை குறைவான கீரையை வரம் மூன்று முறை உணவில் சேர்க்கலாம்.

பக்க விளைவுகள் இல்லை

பக்க விளைவே இல்லாத அளவு பொக்கிஷமாக மருத்துவ குணங்கள் பொதிந்து கிடைக்கின்றன. குழந்தைகள் ஏதோ இலைதலைகள் என்று கீரையை பார்த்தாலே பயந்து ஓடுகின்றனர். சிறுவர், சிறுமியர்கள் இளம் பருவத்திலும் கீரையை தொட்டு கூட பார்ப்பதில்லை. இதை பெற்றோர்கள் மற்ற வேண்டுமானால் சிறு வயதிலிருந்தே கீரையை உணவில் சேர்த்து பழக்க வேண்டும்.

சமைக்கும் விதம்

கீரை சமைத்த தண்ணீரை கொட்டாமல் அதை பருப்பு சாம்பார், ரசத்தில் கலந்து விடலாம். கீரைகள் என்றாலே சத்துக்களின் தொகுப்பு என்பதை பெற்றவர்கள் உணர வேண்டும். எலும்பு உறுதி,இடுப்பு வலி பிரச்சனைக்கு தேவையான வைட்டமின் கே இதில் உள்ளது. சர்க்கரை நோய்க்கு கீரை சேர்த்து கொள்ள சர்க்கரை அளவு குறையும்.

கரோட்டின் சத்து

புற்று நோய், இதய நோய், உடலை கட்டுக்கோப்புடன் வைக்கவும், கடுமையான நோய் தடுக்க,கொழுப்பை குறைக்க, செரிமானத்தை கூட்டுவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதிகமாக எண்ணெயில் பொரிக்காமல் வேகவைத்தோ, கூட்டு செய்தோ சாப்பிட பலன் அதிகம். எல்லா சத்துக்களும் நிறைந்த கீரைகளை அதிக நேரம் சமைக்க கூடாது. கரோட்டின் எனும் சத்து அதிகம் நேரம் சமைப்பதால் கீரையில் இருந்து போய்விடும். கரோட்டின் பார்வை திறனுக்கு உதவும் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க

நீங்கள் உபயோகபடுத்தும் பாத்திரங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…

One thought on “இரும்பு சத்துஅதிகரிக்க.. உணவில் இதை சேர்த்துக் கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *