ஆன்மிகம்செய்திகள்ஜோதிடம்

தினம் ஒரு கோயில்:- கங்கை கொண்ட சோழபுரத்தின் வரலாறு..

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள ருள்மிகு பிரகதிஸ்வரர் திருக்கோயில் பல வரலாற்று சிறப்புகளைக் கொண்டுள்ளது.

கோயிலின் தல வரலாறு தஞ்சாவூர் பெரிய கோயிலைக் காட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் பிறந்தவர் ராஜேந்திர சோழன், இயற்பெயர் மதுராந்தகன். இவரது ஆட்சிகாலமான கி.பி. 1012 காலகட்டத்தில் இத் திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது. தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோயிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி லிங்கத்தையும் நந்தியையும் பெரியதாக பிரதிஷ்டை செய்தார்.

தஞ்சாவூரை போலவே சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும் அம்மனுக்கு பொரியநாயகி என்றும் பெயர் சூட்டினார் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தார் இதனால் இவ்வூர் கங்கை கொண்ட சோழபுரம் ஆனது. கும்பாபிஷேக நீரை கோயிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன் மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை வடித்தார் இக்கோயில் முழுவதும் பாறாங்கல்லால் ஆனது. இங்குள்ள லிங்கம் தமிழத்தின் மிகப்பெரிய லிங்கம் ஆகும். இவருக்கு உடுத்துவதற்கு தனியாக வேட்டி துண்டு நெய்யப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *