Videosசினிமா

ரசிகர்களுக்கு நன்றி கூறும் ஹிப் ஹாப் தமிழா

வரிகளுக்கு இசையமைக்கப்பட்டு வெளியிடப்படுவது பாடல். பாடல் என்ற சொல்லைக் கேட்கும் பொழுது திரைப்படங்கள் நினைவுக்கு வருகிறது. திரைப்படங்கள் மட்டுமல்லாமல் அதில் நடித்து நடனமாடிய கதாநாயகர் கதாநாயகி என பல விஷயங்கள் நினைவுக்கு வரக்கூடும். சிலருக்கு பாடியவர்களின் முகம் நினைவுக்கு வரும்.

ஆம் பாடகர்களும் இசையமைப்பாளர்களும் கவிஞர்களும் தான் மக்களிடையே பாடல்கள் மூலம் உணர்ச்சி ததும்ப வைக்க காரணமாக இருப்பவர்கள். பாடல் என்றவுடன் திரைப்படம் தான் நினைவுக்கு வருவது இயல்பான விஷயமாக இருந்தாலும் பாடல் என்றவுடன் ‘ஆல்பம்’ தான் நினைவுக்கு வர வேண்டும். ஏனென்றால் அதுதான் வெற்றிகரமான இசையமைப்பாளராக திகழ அவர்களின் பயணம் துவங்க அடித்தளமாக விளங்கிய ஒன்றாகும்.

திங்க் மியூசிக் நிறுவனம் பல பாடல்களை வெளியிட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. தமிழ் மொழியில் ஆதியின் ஹிப் ஹாப் பாடல்களை வெளியிட்டு அவரை அறிமுகப் படுத்தியது திங்க் மியூசிக் நிறுவனம். திரை உலகில் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராக, பாடல் எழுத்தாளராக, இயக்குனராகவும் இருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி தன்னுடைய அடித்தளமும் வேருமான ஆல்பம் பாடலை இயக்கி திங்க் மியூசிக் நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார். அந்த ஆல்பத்தின் பெயர் ‘நான் ஒரு ஏலியன்’.

6 ஆகஸ்ட் 2002 இந்த ஆல்பத்தின் ஒரு பாடல் வெளியிடப்பட 15 ஆகஸ்ட் 2020 முழுமையாக ஆல்பம் வெளியிடப்பட்டது. முதலில் வெளியிடப்பட்ட அந்த ஒரு பாடலுக்கு 3 மில்லியன் மக்கள் பார்வையிட அதற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி நன்றி தெரிவிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் வீடியோவெளியிட்டுள்ளார்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி அவருடைய பாணியில் ஒரு பாடலாகவே நன்றியைக் கூறி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆல்பத்தின் அந்த முதல் பாடல் இதோ.

‘நான் ஒரு ஏலியன்’ என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த ஆல்பத்தில் ஆறு பாடல்கள் உள்ளன. அதனின் முதல் பாடல் மட்டுமே தனியாக வெளியிடப்பட்டு பெரிய அளவில் வரவேற்கப்பட்டு உள்ளது. அத்துடன் மேலும் 5 பாடல்கள் கூடிய முழு ஆல்பம் இதோ.

23 நிமிடங்கள் கூடிய இந்த ஆல்பத்திற்கும் 491 ஆயிரம் மக்கள் பார்வையிடப்பட்டு வரவேற்புகள் வந்து கொண்டே இருக்கின்றது. மக்களே நீங்கள் பார்த்து விட்டீர்களா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *