வாழ்க்கை முறைவாழ்வியல்

இங்கே உங்கள் வெற்றியை நிலைநாட்டுங்கள்.!

சக ஊழியர்களிடம் குறையிருந்தாலும் இவரைப் பற்றி உங்கள் மேலதிகாரியிடம் குறை சொல்லி விட வேண்டும் என்றால் ஒரு முறை சொன்னால் அதுவே நமக்கு வழக்கமாகும். நான் புகார் சொல்லக் கூடிய நபர் நம்மால் பாதிக்கக் கூடிய சூழலும் வந்து விடும். அவர் வாழ்க்கையை கெடுத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி காலந்தோறும் வளர்ந்து கொண்டே இருக்கும்.

நம்பிக்கை, மரியாதை

திறமையை வைத்து தான் முன்னேற வேண்டுமே தவிர, குறுக்கு வழிகளை பயன்படுத்தக்கூடாது. இதில் ஈடுபட்டால் என்றாவது ஒருநாள் அதல பாதாளத்தில் தள்ளி விடும். மேலதிகாரி உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, மரியாதை இரண்டையும் ஒருபோதும் சீர்குலைத்து விடக்கூடாது. செய்யக் கூடிய பணியில் பணத்தை விட அனுபவம் பெறுவதை முக்கியமானத இருக்கும்.

வேளையில் உங்களால் புதிதாக எதையும் கற்றுக்கொள்ள முடியவில்லை. அலுவலகத்தில் உங்கள் பெயரை நிலைநிறுத்தவும் முடியவில்லை என்றால், அடுத்த வேலைக்கு செல்ல வேண்டியதுதான். அடுத்த நிறுவனத்துக்கு செல்லும்போது நேர்முகத்தேர்வில் முன்னர் பணிபுரிந்த நிறுவனத்தைப் பற்றி ஒருபோதும் குற்றம் சொல்லி விடாதீர்கள்.

அது உங்கள் நற்பெயரை களங்கம் ஏற்படுத்தும். திறனை வளர்த்துக் கொள்வதுதான் வேலையில் முதல் படி, எவ்வாறு முன்னேறலாம் என்று யோசிப்பதுதான் முதல் வேலையாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றியை தேடி கொடுப்பதும் இதுதான். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்கும் சில வழிமுறைகள் உள்ளன. முதலில் குறிப்பிடுவது நன்றி விசுவாசம். இரண்டாவது நீங்கள் தரும் உருப்படியான யோசனை.

உயர்வு பெறுவீர்கள்

மூன்றாவது அவருடைய மதிப்பை அதிகரிக்கும் வகையில் உங்கள் நடவடிக்கை இதைச் சரியாக செய்தால் உங்களுக்கு கிடைக்கும். நல்ல பெயரை யாராலும் அழிக்க முடியாது. எல்லாவற்றிலும் வித்தியாசம் யாருமே சிந்திக்காத, ஆனால் மிகவும் எளிமையான கட்டாயம் தேவையானது எது என்று பாருங்கள். பல விஷயங்கள் உங்கள் கண்ணுக்கு முன்னால் வரும். இதை சிரத்தையுடன் செய்தால் உயர்வு பெறுவீர்கள்.

மற்றவர்களிடமிருந்து எப்படி சிறந்து விளங்குவது என்ற வழியை கண்டறியுங்கள். தலைமை பண்பு என்பது விரைவில் வந்து விடாது. அதற்கும் சில வழிகள் இருக்கிறது. எந்த விஷயத்தையும் பிராக்டிகலாக சிந்திக்க வேண்டும். உங்களுக்கு தெரியாததை தெரிந்து கொள்ள முயற்சி எடுங்கள். சுற்றி இருப்பவர்களிடம் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். இதை முறையாக கற்றறிந்த செயல்பட்டால் தலைமைப் பண்புகள் வர தகுதியான நபர் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.

ஏராளமான அம்சங்கள்

வேலை கிடைக்கவில்லை என்ற நிலைமாறி கிடைத்த வேலையை தக்க வைக்க ஆகப்பெரிய முயற்சி எடுக்க வேண்டும். கிடைத்த வேலையில் செம்மையாக திறமையை வளர்த்துக் கொள்ள ஏராளமான அம்சங்களை கடைபிடிக்க வேண்டியுள்ளது. சிறப்பான பணி செய்தால் போதும் என்று மற்றும் நினைக்கக்கூடாது. அலுவலக பணியில் சாரி செல்வதை முடிந்தவரை குறைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் சொல்லும்போது நீங்கள் எந்த மாதிரியான நபர் என்று நிர்வாகம் முடிவு செய்துவிடும்.

வேலை பார்க்கும் இடத்தில் பணிகள் சிறப்பாக நடக்க ஏதாவது ஒன்று குறையும். அது என்ன என்று ஆராய்ந்து கண்டறிந்து நீங்கள் செய்வது மேலிடம் மதிக்கக் கூடிய விஷயமாக இருக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு முறையும் கடைப்பிடித்தாலே நீங்கள் பணிகளில் அளிப்பதோடு ஜெயித்து படிப்படியாக முன்னேறிக் கொண்டே போகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *