மருத்துவம்வாழ்க்கை முறை

ஹல்லோ லேடீஸ் இந்த அறிகுறிகள் இருக்கா… அப்போ இஃதெல்லாம் உங்களுக்கு தான்..!!

பெண்களுக்காக மட்டுமே

நாம் இந்த பதிவில் பார்க்க போவது என்னவென்றால், நம் முன்னோர்கள் நமக்கு கூறிய வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்பட கூடிய மாதவிடாய் இறுதி நிலை பற்றியும் பார்க்கலாம். மெனோபாஸ் என்ற நிலையை ஒவ்வொரு பெண்ணும் கடக்க வேண்டும். அதற்கு முன்னர் நாம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கொள்வது அவசியம். நாம் நம் உடலை எப்படி காத்து கொள்வது அதை எப்படி எதிர் கொள்வது போன்ற பல விஷயங்களை தெரிஞ்சுக்க போறோம்.

உண்மையிலே மாதவிடாய் நிற்பதற்கு பத்து மாதம் முன்பாகவே, மாதவிடாய் நிற்பதற்கான அறிகுறிகள் தோன்றும். பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் நிற்றலுக்கான அறிகுறிகள் குறுகிய காலமே நீடிக்கும். சரியான உணவுகளை எடுத்து கொள்ளுங்கள், சிறிது உடற்பயிற்சி செய்யுங்கள், வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திகோங்க, இதனால பெருமித உணர்வை ஏற்படுத்தி, மாதவிடாய் நின்ற பின்னும், நீண்ட காலம் நலமாக வாழ்க்கை வாழ்ந்திட உதவும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உடல் ரீதியான அறிகுறிகள்

சூழ்நிலைக்கு ஒத்துப்போக இயலாமை. மன அழுத்தம், மன குழப்பங்கள்; தலை லேசாக இருப்பது, மயக்கம், சமநிலை தடுமாற்ற நிகழ்வுகள்; படபடப்பு, களைப்பு, மன நிலையில் மாறுபடுதல்; திடீர் கண்ணீர், இரவு முழுவதும் தடைபட்ட தூக்கம்; அதிகம் வேர்த்தல், உடல் எடை குறைவு, ஒழுங்கற்ற இதய துடிப்பு; தும்மும் போது, சிரிக்கும் போது கட்டுப்படுத்த முடியாத சிறுநீர் வெளிப்பாடு; நமச்சல், அரிப்பு, ஊறல் தோல்; தசைகளில் அதிக அழுத்தம்; ஒழுங்கற்ற மாத விடாய், குறுகிய கால லேசான மாத விடாய், அதிக மாத விடாய், குறுகிய சுழற்சி, நீண்ட கால சுழற்சிகள்;சூடான வெளிப்பாடு, மார்பகம் மென்மையாதல்; பதட்டம், கோபம்;முகத்தில் முடி அதிகமாதல்; உடல் வாசனையில் மாற்றங்கள்; ஈறுவலி, பல்லில் ரத்தம் வடிதல், விரல் நகத்தில் மாறுதல் ஏற்படும், விரல் நகம் மென்மையாகி வெடித்தல், எளிதில் உடைதல்; காது குடைச்சல், காதில் இரைச்சல்; பாலுணர்வு விழைவு குறைதல்; பெண்ணுறுப்பு வறட்சியடைதல்; இதெல்லாம் இருக்கா அப்போ இதெல்லாம் செய்து உங்கள பாதுகாத்து கொள்ளுங்கள்.

இதெல்லாம் அறிகுறிக்கான ஆலோசனைகள்

மனப்பாங்கு : மாத விடாய் ஒதுங்கும் காரணியாகவோ, மாத விடாய் நிறுத்தம் ஒரு வேகத்தடையாகவோ கருதாமல் மனசை மாற்றி கொண்டால் வாழ்க்கையை உற்சாகமாக வழக்கம் போல மேற்கொள்ளுங்க.

இதய நோய்கள் – அரை மணி நேரம் தினமும் உடற்பயிற்சி செய்யுங்க. உப்பு, ஆயில் பண்டங்களை குறைத்து பச்சை காய், பழங்கள், கீரைகளை சம விகிதத்தில் உன்ன பழக்க படுத்துங்க.

எடை கூடுவதை தடுக்க அளவான உணவுகளை சத்தானதாக, அளவு குறைவாக இடைவெளி விட்டு எடுத்து கொள்ளலாம். இதனால் எடை கூடாமல் உங்களால் பார்த்து கொள்ள முடியும்.

தூக்கம் தொல்லை – சரியான, சத்தான உணவை உட்கொள்ளணும். குறித்த நேரத்தில் தூங்கி அதிகாலை ஒரு குறித்த நேரத்தில் எழுந்திரிக்க பழகிக்கோங்க. விடுமுறை தானே என்று கால தாமதம் கூடவே கூடாது.

உலர் அரிப்பு தோல் – வெயில் தோல் பகுதியில் பட்டு பாதிக்காம இருக்க, ஈரப்பசை உள்ள கிரீம் அல்லது லோசனை பயன்படுத்து வதனால் உங்கள் தோல் பாதுகாப்பாக இருக்கும்.

வெப்ப வெளிப்பாடு – சம்மர் காலங்களிலோ, வெப்பமான அறையிலோ இருக்கும் போது நீர் ஆகாரம் குடிங்க. காபி, டீ, மசாலா உணவை எடுக்காதிங்க.

மேலும் படிக்க

ஹல்லோ லேடீஸ் இந்த அறிகுறிகள் இருக்கா… அப்போ இதெல்லாம் உங்களுக்கான நிவாரணங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *