ஆரோக்கியம்சமையல் குறிப்புவாழ்க்கை முறை

ஆரோக்கியம் நிறைந்த பச்சடி..!

ஒவ்வொரு நாளும் நம் நேரத்தை பிரஷாக வைத்து கொள்ள, இந்த பச்சடிகள் உண்ணலாம். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், அன்றைய நாள் சுறுசுறுப்புடனும் இருக்கும். கத்தரிக்காய் பச்சடி, ஜவ்வரிசி பச்சடி, வாழைத் தண்டு பச்சடி.

கத்தரிக்காய் பச்சடி

தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் கழுவி நறுக்கியது கால் கிலோ, தயிர், பச்சை மிளகாய் 2,உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை : கத்திரிக்காயை சுட்டு தோலை உரித்து சதையை நன்றாக பிசைந்து எடுத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, அரிந்த பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித் தழை ஆகியவற்றை பிசைந்த கத்திரிக்காய் உடன் சேர்க்க வேண்டும். இதை ஒரு தடவை கிளறி விட்டு தயிரில் கலந்து, உப்பு சேர்த்துக் கொண்டு பரிமாறலாம். சுவையான கத்தரிக்காய் பச்சடி தயார்.

ஜவ்வரிசி பச்சடி

தேவையான பொருட்கள் : ஜவ்வரிசி மூன்று தேக்கரண்டி, நெய் ஒரு ஸ்பூன், கெட்டி தயிர் 200 மில்லி, உப்பு, கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய், மல்லித்தழை, பெருங்காயம் தேவைக்கு ஏற்ப.

செய்முறை : ஜவ்வரிசி நெய் விட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். பிறகு அதை தயிரில் போட்டு கலக்கவும். உப்பு, கொத்தமல்லித் தழை, ஆகியவற்றை அரைத்து தயிரில் கலந்து கொள்ள வேண்டும். கடைசியில் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளித்து அதில் கொட்டவும். சுவையான ஜவ்வரிசி பச்சடி தயார்.

வாழைத்தண்டு பச்சடி

தேவையான பொருட்கள் : இளம் வாழைத்தண்டு 1, பச்சைமிளகாய் 5, தயிர் 100 மில்லி,கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத் தூள்,உப்பு தேவைக்கு ஏற்ப.

செய்முறை : வாழைத்தண்டை நாரெடுத்து மேல் தோல் எடுத்து சிறிது அறிந்து கொள்ள வேண்டும். அத்துடன் பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும். பிறகு கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத் தூள் தாளித்துக் கொட்டினால், சுவையான வாழைத்தண்டு பச்சடி தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *