செய்திகள்மருத்துவம்வாழ்க்கை முறை

ஹா ஹா மழையோ மழை நோயோ நோய்

மழை! சொல்லைக் கேட்டாலே ஜில்லென்ற ஒரு காற்று. ஒவ்வொரு தனி மனிதனின் ஏக்கம் மழை. மழை வந்ததும் கொண்டாட்டம் மகிழ்ச்சி ஆரவாரம் சந்தோஷம் இருக்கும் அளவிற்கு விழிப்புணர்வு இல்லை. மழை வந்தால் எவ்வாறு அதை சேமிப்பது என்ற அறியாமை இன்றும் நிகழ்ந்து வருகிறது. ஆங்காங்கே ஏரிகள் அடுக்குமாடி கட்டடங்களாக மாறின; தண்ணீர் உள்புகுந்து மனிதர்கள் திண்டாடிய காலங்களும் உண்டு. எவ்வளவு அடிபட்டாலும் நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழியை நாம் தேர்ந்தெடுப்பதில்லை.

தமிழகத்தில் பெரும் வறட்சி சேமிப்பு பாடத்தைக் கற்றுக் கொடுத்தது. பழுதான ஏரிகள் சீரடைந்து பூங்காக்களாக மாற்றும் பணிகள் செம்மையாக நடைபெற்று வருகிறது. நம்மை நாம் பாதுகாக்கவில்லை என்றாலும் நம்மை நாடி வந்த நம் பிள்ளைகளை பாதுகாத்தே ஆக வேண்டுமல்லவா!

மழைகாலத்தில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழை தண்ணீரால் ஏற்படக்கூடிய நோய்கள் பல. கொரோனா என்னும் கோரக் கொடூரம் இன்னும் நம்மை விட்டு அகலாமல் நிற்க மழைகாலத்தில் வருடாந்திரமாக வந்துபோகும் பெயர்பெற்ற காய்ச்சலுக்கு தகுந்த முன்னேற்பாடுடன் இருப்பது அவசியம் அல்லவா!

நோய்களுக்கு பிடித்த மழை காலம்

வருடம் காலங்களால் பிரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மழைகாலம் மக்களுக்கு மட்டுமல்லாமல் பூச்சிகளுக்கும் பிடித்ததாக அமைகிறது. பூச்சிகள் என்று பரவலாக சொன்னாலும் நுண்ணுயிரிகளுக்கும் மிகவும் பிடித்ததாக அமைகிறது. ஏனென்றால் நுண்ணுயிர்களை பொருத்தமட்டும் அவைகள் குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் மட்டுமே வாழக்கூடியது. மழைக்காலம் அதற்குத் தகுந்தார்போல் அமைகிறது.

வைரஸ் பாக்டீரியா ஃபங்கை இப்படி எல்லாம் வளர்வதற்கும் பரவுவதற்கும் அடித்தளமாக கொள்வது ஈரப்பதம். மழைக்காலம் ஈரப்பதத்தை வற்றாத செல்வமாக அளிக்கக்கூடியது. நோய்களை பற்றிய விழிப்புணர்வு தெரிந்து முன் எச்சரிக்கையுடன் இருங்கள்.

சிட்டி ரோபோ மாதிரி நுண்ணுயிரி இருக்கும் கொசுவை கண்டுபிடிச்சு கொல்ல முடியாதுங்க.

எச்சரிக்கையா இருக்க முதல்ல நம்ம செய்ய வேண்டிய விஷயம் தண்ணீரை எங்குமே தேங்க விடக்கூடாது. தண்ணீர் தேக்கத்துல கொசு இனப்பெருக்கம் செய்யும். இந்த அனைத்து நுண்ணுயிரிகளுக்கும் போக்குவரத்தா அமைவது கொசு தாங்க.

சளி ஜலதோஷம் காய்ச்சல்

மழைனு பேரு கேட்டாலே ஹச்சுனு தும்மல் வரது ரொம்ப சாதாரணமான விஷயங்க.

இதெல்லாம் அரசியல் வாழ்க்கையில் சாதாரணமப்பா!

இது ரொம்ப சாதாரணமான விஷயமாக இருந்தது கொரோனா வரவுக்கு முன்னாடி ஆனா ஒரு தும்மல் மூக்கடைப்பு ஜலதோஷம் மூச்சு விட சிரமம் இப்படிப்பட்ட அறிகுறிகள் வந்தாலே பரிசோதனை செய்ய பரிசளிக்கிறாங்க. ஆனால் கொரோனா இருந்தாலும் இந்த அறிகுறிகளுக்கு பயப்படாம நம்மளோட கை வைத்தியத்தை மேற்கொள்வது நல்ல விஷயம்.

விளம்பரத்துல வரமாதிரி ‘இஞ்சி அதிமதுரம் அஸ்வகந்தா எல்லாம் போட்ட டீ அது மட்டும் இல்லைங்க நம்ம சமையல்ல சாதாரணமா செய்யறதுலையே மிளகு இஞ்சி பூண்டு மஞ்சள் சமையல் பொருளாக இருந்தாலும் மருத்துவ குணமிக்க பொருளுங்க.

சுக்கு காபி, இஞ்சி டீ, மிளகு ரசம், திப்லி ரசம், கற்பூரவல்லி தொகையல், கற்பூரவள்ளி ரசம், மஞ்சள் மிளகு தட்டிப்போட்ட பால் இதுதாங்க ஈஸியா சமையலேயே மருத்துவமாக்குற முறை.

இல்ல இது சமையல் மாதிரிதான் இருக்கு மருந்து மாதிரி இல்லனு ஃபீல் பண்ணிங்கனா; கஷாயம் வச்சு குடிங்க. ஒரு டம்ளர் தண்ணி எடுத்து துளசி இஞ்சி மிளகு கற்பூரவள்ளி எல்லாம் சேர்த்து கால் டம்ளரா சுண்ட வைத்து குடிக்கவும். அவளதாங்க ஈஸியா நோயற்று மழைக்காலத்த கடந்துடுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *