நுனி முதல் வேர் வரை..!!
வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்ப்பதால் நோயின்றி வாழலாம். மருத்துவ பொக்கிஷத்தில் மனித உடலுக்கு தேவையான சத்துக்களைக் கொண்ட, நுனி முதல் வேர் வரை பயனுள்ளதாக இருக்கும் முருங்கைக் கீரையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
உடலுக்கு நல்ல வலிமை
இக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. கீரைகள் அனைத்தும் சத்துமிக்கது. குறிப்பாக முருங்கைக்கீரையில் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்கக்கூடியது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும் முருங்கை பிஞ்சு ஒரு பத்திய உணவாக கருதப்படுகிறது. இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நல்லது.
முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும், வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால், கை கால் உடம்பின் வலிகள் நீங்கும். முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தருவதோடு தாது விருத்தியை உண்டு பண்ணுகின்றது.
உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியது என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கை இலை சாறுடன், பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால் இரத்த சுத்தியும், எலும்புகளையும், இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம் சத்து, வைட்டமின்கள் உள்ளன. முருங்கை இலை சாறுடன், தேனும் ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சள்காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.
பிரசவத்தை துரிதப்படுத்த
இதில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு மூட்டுவலிகளில் பயன்படுத்தலாம். முருங்கை வேரில் இருந்து சாறெடுத்து, பாலுடன் சேர்த்துப் பருகிவர காசநோய், கீழ்வாயு விருத்தியாகும். கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை பயன்படுத்தி தயாரிக்கப்படும், பதார்த்தம் தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். மார்பு சளி சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது.
முருங்கைப்பூ சூப் சாப்பிடுவதன் மூலம் ஆண், பெண் மலட்டுத்தன்மை நீங்கும். முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறைய, நோய்களை போக்கி, இரத்தவிருத்தி, தாதுவிருத்தி செய்கிறது. முருங்கைக் காயை வேக வைத்து, கொஞ்சம் உப்பு சேர்த்துச் முருங்கைக்காய் சாம்பார் சுவையானதாக மட்டும் அல்லாமல், மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
உடம்பில் நல்ல ரத்தம் ஊற
வாரம் ஒரு முறையோ, இரு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தி அடையும். வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. முருங்கை இலையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல்வியாதிகள் நீங்கும். முருங்கைப் பட்டை உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்தாக பயன்படுகிறது.
கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்தாக பயன்படுத்தலாம். முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம் உட்சூடு, கண்நோய் பித்தமூர்ச்சை, இவற்றை முருங்கைக்கீரை நீக்கி விடுகிறது. அதனால் முருங்கை மருத்துவ பொக்கிஷம் என்று சொல்கின்றனர்.