சுகமாக வாழ… இனியெல்லாம் சுகமே..!!
நாயுருவியானது ஒருவகை மூலிகைக்கு என்று சிறப்பு குணம் பெற்றது. இந்த இலை சாறை காதில் ரெண்டு சொட்டு விட சீழ் வடிதல் நிற்கும். இலையை அரைத்த சாறை, சம அளவு நீரை கலந்து காய்ச்சி தினம் மூன்று வேலை ஆறு நாட்கள் சாப்பிட்டு பால் அருந்த வேண்டும். இதனால் தடைபட்ட சிறுநீர் கழியும்.சிறுநீரகம் நன்கு செயல்படுவதுடன், சிறுநீர் தாரை எரிச்சல் இருக்காது.
நாயுருவி
நாட்பட்ட மலச்சிக்கல் உடையவர்கள், நாயுருவி இலை பறித்து, குடிநீரில் போட்டு வைத்து அந்த நீரை அருந்திவந்தால் தீரும். நாயுருவி வேரால், பல் துலக்க பல் தூய்மையாகி, முக வசீகரம் ஆகும். ஆயுள் அதிகரிக்கும். இந்த இலையை கசாயமாக செய்து பருக புளித்த ஏப்பம், உடல் வீக்கம், அஜீரணம், வயிற்று வலி குணமாகும்.நல்ல பலன் கிடைக்கும்.
அருகம்புல்
நரம்பு சம்மந்தப்பட்ட நோய்களால் பாதிக்க பட்டவர்கள் அருகம்புல் சாறு சாப்பாட்டிற்கு பின் அருந்தி வர கை, கால் நடுக்கம், வாய் குளறல் போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். கண் பார்வை தெளிவடையவும், மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். ஞாபக சக்தியை துண்டை அருகம்புல் சாறு குடிக்கலாம். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி போடி செய்து தினமும் கசாயமாக வைத்து குடிக்க நினைவாற்றல் பெருகும். மெலிந்த உடல் தேறும். புத்துணர்வு பெரும்.
நாயுருவி இலை, துளசி அரைத்து நெல்லி அளவு இரு வேளை கொடுக்க, வண்டு, பூச்சி கடி குணமாகும். இதை இலையை மஞ்சள் சேர்த்து வைக்க மூலம் வலி குறையும். நாயுருவி, பூண்டு, மிளகு சேர்த்து அரைத்து சிறு உருண்டை உருட்டி காய வாய்த்த வில்லையை சாப்பிட்டு வந்தால் விட்டு விட்டு வரும் காய்ச்சல் குணமாகும். இலையை பருப்புடன் கூட்டு செய்து சாப்பிட இருமல் நுரையீரல் சளி குணம் அடையும்.
மேக நோய்க்கு, சிறுநீர் வெள்ளை ஒழுக்கு, பேதி, ரத்த மூலம் குணமாக நாயுருவி இலை அரைத்து எருமை தயிருடன் காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். காராமணி பயிர், நாயுருவி செடியின் இலை ரெண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நீர்க்கட்டு உள்ளவரின் தொப்புள் மீது பற்று போடா நீர் கட்டு நீங்கும். நோய்நீக்கி, உடல் தேற்றல், சிறுநீர் பெருக்குதல் முக்கிய காரணியாக செயல்படுகிறது.
Pingback: உடல் சூட்டை தணிக்கும் கோவக்காய்…!! | SlateKuchi