சினிமா

சந்தோஷமாக இருக்கும் ஹரிஷ்-பிரியா! காதலா!

இஸ்பெட் ராஜாவும் மேயாதமான் நாயகியும் நாமாக மாறும் தருணம். தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகர்கள் என்பதைவிட பட்டையை கிளப்பும் நடிகர்களாக திகழும் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து தரும் தாறுமாறான அப்டேட்.

ஹரிஷ் கல்யாண்

பியார் பிரேமா காதல் இஸ்பேட் ராஜா இதய ராணி தாராள பிரபு என சமீபத்தில் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்பவர் ஹரிஷ் கல்யாண். அமலாபாலுடன் சிந்துசமவெளியில் தொடங்கிய இவரின் பயணம் பொறியாளன் படத்தில் கண்டறியப்பட்டு பிரமாதமான வாய்ப்புக்கள் வந்தடைந்தது.

பிரியா பவானி சங்கர்

கல்யாணம் முதல் காதல் வரை என்னும் சின்னத்திரை தொடரில் பிரியாவாக பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகி வெள்ளித்திரையில் வைபவுடன் மேயாத மானில் மதுவாக துள்ளியது மேலும் பலரின் மனதை கொள்ளை கொண்டது. அதனைத் தொடர்ந்து எஸ் ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், அருண் விஜய்யுடன் மாபியா அத்தியாயம் ஒன்று என நடித்த படம் அனைத்து பட்டையை கிளப்புகிறது.

ஹரிஷ்-பிரியா

இருவரின் சமூக வலைத்தள பக்கத்தை பார்க்கையில் ஒருவருக்கொருவர் நல்ல நண்பராக இருப்பது தெரிகிறது. தாராள பிரபு நாயகன் ஹரிஷ் கல்யாண் மான்ஸ்டர் நாயகி பிரியா பவானி சங்கர் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அதில் “ஹேப்பி ஃபார் அஸ்” என குறிப்பிட்டுள்ளார் ஹரிஷ் கல்யாண்.

மேலும் படிக்க : சீரியல் நடிகர் நந்தகாேபால் சுவாரசியமான தகவல்கள்!

காதலா!

பிரியா பவானி சங்கர் மேயாதமான் படம் வெளியீட்டிற்குப் பிறகு தன் சொந்த வாழ்க்கை பற்றிய பேட்டியில் அவருக்கு ஒரு காதலன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது இது என்ன புதுசா! என்று கிசுகிசுக்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம்

ஹரிஷ் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் காற்றில் கலந்த காதல், ஹரிஷ் இதயத்தில் பிரியா என்ற ஹேஷ்டேகும் காணப்படுகிறது. அதற்கு பிரியா தாமும் ஒப்புக்கொள்ளும் வகையில் ‘சேம் டு யு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள்

இந்த பதிவில் ரசிகர்கள் அனைவரும் ‘புது படத்தின் பிரமோஷனா!’ என்ற வினாவுடன் யூகித்துள்ளனர். ரசிகர்களுக்கு தெளிவு கொடுக்க இன்று மாலை 5 மணி அளவில் ஹரிஷ் கல்யாண் பெரிய ஆச்சர்யத்துடன் சமூக வலைதளங்களில் செய்தியை வெளியிடப் போகிறார்.

மேலும் படிக்க ;

மேலும் படிக்க ; ஜகமே தந்திரம் தனுஷின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்

தெலுங்கு ரீமேக்

பெல்லி சூபுளு என்னும் தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் பிரியா இணைகின்றனர். அந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு இன்று மாலை 5 மணி அளவில் வெளியிட காத்திருக்கிறது. மக்களே ரெடியா இருங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *