பிகில் இயக்குனருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அட்லி குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். யாருன்னு யோசிக்கிறீங்களா மக்களே! இயக்குனர் அட்லி தாங்க.
அட்லி
21 செப்டம்பர் 1986ல பிறந்து இருக்கிறார் அட்லி குமார். ஆட்லி என்றவுடன் நினைவுக்கு வருவது ராஜா ராணி திரைப்படம் தானே! ஆம் அதுதான் அட்லி தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான படம். காதலில் புதுமையை புகுத்தி பல பெண்கள் தன் காதலனை பிரதர் என்று கேலி செய்ததற்கு முழு காரணம் இவர்தான்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் துணை இயக்குனராக எந்திரன் படத்தில் திரையுலக பயணத்தை 2010ல் தொடங்கினார் அட்லி. அந்தப் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கருடன் அடுத்த படமான 3 இடியட்ஸ் என்னும் ஹிந்தி படத்தின் தழுவலான நண்பன் படத்தில் 2012ல் பணிபுரிந்தார்.

2013 ராஜா ராணி படத்தின் மூலமாக தனித்துவ இயக்குனராக திரையுலகை திரும்பி பார்க்க வைத்த சூப்பரான இயக்குனர் அட்லி. கதை திரைக்கதை வசனம் என அனைத்தையும் சிறப்பாக செய்தமைக்கு அறிமுக இயக்குனராக விருதுகளைத் தட்டிச் சென்றார்.
பலரின் படத்தை பிரதிபலிக்கும் விதமாக இவரின் படம் இருக்கிறது என்ற விமர்சனங்களை தாண்டி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தரமான திரைப்படங்களை இயக்கி வருகிறார். பெரும்பான்மையாக இளைய தளபதி விஜய் திரைப்படங்களை இயக்கும் அட்லிக்கு தனி ரசிகர் கூட்டம்.

தெறி மெர்சல் பிகில் என மாஸ் படங்கள் இளையதளபதி விஜய்யின் திரைப்பயணத்திலும் இயக்குனர் அட்லீயின் திரைப்பயணத்திலும் குறிப்பிடத்தக்கவை. இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் திரையுலகில் வலம் வருகிறார். 2017 ஜீவா நடித்த அமானுஷ்ய நகைச்சுவை படமான சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் தயாரிப்பாளராக திகழ்ந்தார் அட்லி.
2014இல் திரையுலகிலேயே தனக்கென்ற ஜோடியை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டார். அட்லீ குமார்-கிருஷ்ணப் பிரியா ஜோடி விருது விழாக்களில் பங்கு கொண்டு ஒருவருக்கு மற்றொருவர் மேல் இருக்கும் காதலை வெளிகாட்டியதில் இவர்களின் ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷம்.

நாலே நாலு படம் தான் கொடுத்து இருக்காரு ஆனா நாலுமே சூப்பர் டூப்பர் ஹிட். 34வது பிறந்த நாளை கொண்டாடும் அட்லிக்கு மக்களின் சார்பாக சிலேட்குச்சியின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.