Videosசினிமா

மலையாள சூப்பர் ஹீரோ துல்கர் சல்மானுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

மாலிவுட்டின் முக்கிய நடிகர் துல்கர் சல்மானுக்கு இன்றைக்கு பிறந்தநாளுங்க. பிரபல நடிகரான மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். துல்கர் சல்மானுக்கு 37 வயசுனு சொன்னா நம்பவா முடியுது!

28 ஜூலை 1983 பிறந்தாரு டி க்யூ (DQ) னு செல்லம்மா அழைக்கப்படற துல்கர் சல்மான். வணிக மேலாளர் தொழிலை செஞ்சுட்டு இருந்த துல்கர் சல்மான் மலையாளத் திரையுலகத்துல 2012 வருடம் தன்னோட 29வது வயசுல தாங்க வந்தாரு.

பிரதானமா மலையாள படங்கள நடிச்சுட்டு இருந்த இவருக்கு தமிழ் தெலுங்கு ஹிந்தி திரையுலகில் வாய்ப்புகள் வர ஆரம்பிச்சுடுச்சு. இரண்டு வருடம் மலையாள படங்கள்ல நடிச்சிட்டு இருந்தவரு தமிழில்ல வாயை மூடி பேசவும் படத்துல ஸ்மார்ட்டா வந்தாரு. முதல் படத்திலேயே மொத்த தமிழ் பொண்ணுங்க மனசுலையும் இடம் பிடிச்சுட்டாரு.

2015 மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்துல நடிச்சாருனு சொல்ரதவிட அந்த கதாபாத்திரத்தை வாழ்தாருனே சொல்லலாம். அந்தப் படத்திலையே தமிழ் திரையுலகம் ரசிகர் கூட்ட மொத்தத்தையும் தன் பக்கம் இழுத்துட்டாரு. சோலோ தமிழ் படத்தில நான்கு வேடத்தில நடிச்சு புது விதமான ஹிட் தந்தார் துல்கர் சல்மான்.

மகாநதி/நடிகையர் திலகம் படம் தமிழ் தெலுங்குனு இரு மொழியிலையும் பட்டைய கிளப்பிச்சு. கீர்த்தி சுரேஷ் சாவித்திரி அம்மா வேடத்திலையும் துல்கர் சல்மான் ஜெமினி கணேசன் வேடத்திலையும் செமையா இருந்தாங்க. ஜெமினி கணேசன நெஜமா பார்க்காதவங்களுக்கு துல்கர் சல்மான பார்த்தா போதுங்கற அளவுக்கு தத்ரூபமா நடிச்சு இருந்தாரு.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலமா மக்கள் கூட்டத்தோடு மனதையெல்லாம் கொள்ளை அடிச்சுட்டாரு துல்கர் சல்மான். ஹிந்தி திரையுலகத்திலையும் கார்வான் படம் மூலமா நல்ல வரவேற்பு கிடைச்சிச்சு.

நடிகராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகர் தயாரிப்பாளர் என பல வேலை பாக்குறாரு துல்கர் சல்மான். இவர் பாக்கற எல்லா வேலைகளும் வரவேற்கப்படுகிறது அது மட்டுமில்லாம விருதுகளையும் தட்டிப் பறிக்கிறாரு. இப்படி சூப்பரா தன்னோட திரையுலக பயணத்தை மேற்கொண்டு இருக்கவருக்கு தற்போது மலையாள படம் வெளியாக காத்திருக்கு.

குருப் என்னும் மலையாள படத்தோட ட்ரெய்லர் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்த நிலைமைல இருக்க துல்கர் சல்மானோட பிறந்தநாளான இன்றைக்கி அந்தப் படத்தோடு ஸ்னீக் பிக் வெளியிட்டு இருக்காங்க.

வேற லெவல்ல இருக்காரு துல்கர் சல்மான். மக்களே அவர அப்படியே பார்த்து ரசிச்சுட்டு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள சொல்லிடுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *