பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வழங்கும் பணி தொடங்கியது
ஹால் டிக்கெட் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சூடுபிடிக்கிறது. மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் வழங்கப்படுகின்றது. கொரான பாதிப்பு தாக்கமுள்ள ரெட்ஜோன் பகுதிகளில் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வீடு தேடி வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். அதன் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு வருகின்றது. மாணவர்கள் ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டியது மிக முக்கியமானதாகும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்புகளை நிறுத்த வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, ஆனால் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனை அடுத்து தமிழ்நாட்டின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பத்தாம் வகுப்பு பொது தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என அறிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிந்த பின்னரே தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு அரசு திட்டமிட்டபடி நடக்கும் என்பது உறுதியாகியுள்ளது அதற்கான ஆயத்த பணியில் மாணவர்களும் ஈடுபடுகின்றனர் என்று தெரியவந்துள்ளது இதனையடுத்து மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வழங்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது இது மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த என்பதால் அரசியல் முழுமூச்சுடன் தீவிரமாக நடத்துகின்றது இதற்கு பொதுமக்களும் மாணவர்களும் முறையாக ஆதரவு தர வேண்டியது அவசியமாகின்றது தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எந்தவித தடங்கலுமின்றி முழுமையாக நடைபெற்ற சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் முறையாக விநியோகிக்கப்படும் என்பதை அரசு உறுதி செய்துள்ளது.
இன்று முதல் ஹால்டிக்கெட்:
மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டுகளை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். அதிகாரபூர்வ இணையதள லிங்கனை இங்கு கொடுத்துள்ளோம. http://www.dge.tn.gov.in/ கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து மாணவர்கள் அவர்களின் அடிப்படைத் தகவலை கொடுத்து ஹால் டிக்கெட் பெறலாம்.
இன்று முதல் இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை நீங்கள் பெறலாம் தேர்வு நடைபெறுவது என்பது உறுதியாகிவிட்டது இந்த நேரத்தில் மாணவர்கள் முழுமையாகத் தங்களுடைய கவனத்தை தேர்வு எழுத வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்