GROUP 4 current affairs : குரூப் 4 தேர்வில் இடம் பெறும் நடப்பு நிகழ்வுகள்
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
1.ஐநா சபை சர்வதேச ஒட்டகங்கள் ஆண்டாக எந்த ஆண்டை அறிவித்துள்ளது ?
விடை : 2024
2. உலகிலேயே மிகப்பெரிய அம்பேத்கர் சிலை எங்கு திறக்கப்பட உள்ளது ?
விடை : விஜயவாடா (ஆந்திரா)
3. சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நிறைவு விழா மாநாடு எங்கு நடைபெற்றது ?
விடை : திருப்பூர்
4. தமிழ்நாடு பட்ஜெட் 2024 – 25 யை தாக்கல் செய்தவர் யார் ?
விடை : தங்கம் தென்னரசு
5. நாட்டின் மிக நீளமான ரயில்வே சுரங்கபாதை எங்கு தொடங்கப்பட உள்ளது ?
விடை : ஜம்மு காஷ்மீர்
6. 2024 – 25 ஆம் நிதி ஆண்டில் தமிழகத்தில் எத்தனை இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது ?
விடை: 8
7. புதுமைப்பெண் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
விடை : 2022
8. Why Bharat Matters என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை : ஜெய்சங்கர்
9. இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரம் எது ?
விடை : பெங்களூர்
10. நான்காவது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டி எங்கு நடைபெற உள்ளது ?
விடை : குல்மார்க்