நீட் தேர்வு ஏழை மாணவர்களைப் பாதிக்கும்!
பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் நீட் தேர்வு தற்பொழுது நடத்துவது குறித்து அவர் வெளியிட்ட கருத்து சிந்திக்க வைக்கின்றது. தற்பொழுது நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகிவிட்டது. ஏழை மாணவர்களைத் நீட் தேர்வு பாதிக்கும். ஆனால் தற்பொழுது நீட் தேர்வு நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசு இருக்கின்றது.
நுழைவுத் தேர்வுகள் நடத்துவது அதன் மதிப்பெண்கள் குறைந்தால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் தேர்வுகளை ஒத்திப் போட்டு அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்துத் தேர்வை நடத்துவது நல்லது ஆகும்.

நீட் தேர்வு தள்ளிப்போட்டுப் பயிற்சிக்குப் பின் மாணவர்களின் மன உளைச்சலை குறைத்து அவர்களின் தற்கொலை முயற்சியைத் தடுக்க உதவியாக இருக்கும். இதன் கோரிக்கையை முன்னிறுத்தி சுப்பிரமணிய சுவாமி அவர்கள் பிரதமருக்குக் கடிதம். எழுதி இருக்கின்றார். இதன்படி அரசு ஆராய்ந்து ஒரு தெளிவான முடிவு எடுக்க வேண்டும் என்று மக்கள் காத்திருக்கின்றனர். மாணவர்கள் தேர்வுகுறித்து அச்சத்தில் இருப்பதால் அரசு தற்போது முடிவெடுக்க வேண்டிய நிலைமையில் இருக்கின்றது என்பது உண்மையாகும்.
அரசு இந்தத் தேர்வை நடத்த வேண்டும் அதுவும் குறிப்பிட்ட தேதியில் நடத்த வேண்டும் என்று இருக்குமானால் கிராமப்புறம் மற்றும் நடுத்தர மக்களின் குழந்தைகளின் நுழைவுத்தேர்வு என்பதை வெற்றிகரமாக முடிப்பார் என்ற சந்தேகம் இருக்கின்றது. அத்துடன் நுழைவுத்தேர்வை ஜெயில் நுழைவுத்தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்று பல வீட்டு மாணவர்களுக்குத் தெரியாத நிலையே தற்போது இருக்கின்றது. ஏனெனில் இந்தத் தேர்வுகளுக்குக் கடினமான உழைப்பும் படிப்பும் இருக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது.

இதுகுறித்து அரசு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். தேர்வை நடத்தினால் குறைந்தபட்சம் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கொடுக்கலாம். மருத்துவ கனவு என்பது மாடி வீட்டு மாணவர்களுக்கு மட்டுமல்ல அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் என்பதை மனதில் வைத்து அரசு தேர்வினை நடத்தினால் அனைத்து தரப்பு தேர்வானது அவசியமாகக் கருதப்படுகின்றது. தேர்வு நடைபெறும் பட்சத்தில் மதிப்பெண்களில் சலுகை கொடுப்பது அவசியமாகிறது.