ஃபேசன்அழகு குறிப்புகள்

Glow Skin tips: முகப்பொலிவிற்கு நடிகைகள் இதைத் தான் பண்றாங்க !!!

வீட்டில் தேன் இருந்தால் உடனடி பொலிவை பெறலாம். வெளியில் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உடனடி முகபொலிவு பெற வேண்டும். நாம் செய்ய வேண்டியது என்னவெனில் தேன் மற்றும் காப்பி பொடி வைத்து முகத்தை உடனடி பொலிவு பெற வைக்கலாம்.

முகப் பொலிவு பெற எளிய டிப்ஸ்

முதலில் ஒரு பாத்திரத்தில் தேன் மற்றும் காப்பி பொடி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.அதன்பின் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் நன்கு கழுவி விட்டு பின்பு நாம் கலந்து வைத்ததை ஒரு பேக் போல் முகத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.15 அல்லது 20 நிமிடம் கழித்து அரிசி ஊர வைத்த நீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும். மேலும் காய்ச்சாத பால் கொண்டு முகத்தை கிளென்ஸ் செய்யலாம் இந்த டிப்ஸ் உலக அழகி ஐஸ்வர்யாராய் பின்பற்றி வருகின்றார்.

இதனை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர உங்கள் முகம் எண்ணெய் வடியாமல் பொலிவாக எப்பொழுதும் இருக்கும். நாம் இதற்காக பியூட்டி பார்லர் சென்று அதிக பணத்தை செலவழிக்காமல் வீட்டிலேயே நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிய முறையில் இவ்வாறு செய்வதாலேயே நமது முகம் நன்கு பளபளவென இருக்கும். மேலும் இயற்கையான வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நாம் செய்வதால் முகத்திற்கு எந்த வித அலர்ஜியும், பாதிப்பும் ஏற்படாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *