திகிலூட்டும் மர்மம் கேரளாவின் சுமதி வளவு 65 ஆண்டுகளாக அச்சுறுத்தும் இளம்பெண்ணின் மர்மம் பகலிலும் மக்கள் அச்சம்
அடர்ந்த காட்டுப் பகுதி போன்று இருக்கும் சுமதி வளவு பகுதி புகைப்படங்களில் பார்க்கும் போதே அச்சமூட்டுவதாக இருந்தாலும், அப்பகுதியினர் நம்பிக்கையின் உண்மை தன்மை குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இதனை சோதனை செய்து பார்க்க அப்பகுதிக்கு தனியாக காரில் சென்றவர்களும், அப்பகுதியில் வினோதமான சத்தங்கள் வருவதாக மட்டுமே தெரிவிக்கின்றனர்.
மேலும் அப்பகுதி எஸ் வடிவில் இருப்பதால் விபத்துகள் அதிகமாக நடப்பதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றன. பல அறிவியல் முன்னேற்றங்கள் வந்தாலும், உடனடியாக பிரத பேய்கள், ஆவிகள் குறித்த நம்பிக்கை மக்கள் மத்தியில் இன்னும் இடம் பெற்றிருப்பதற்கு சுமதி வளவு பற்றிய கதை சிறந்த எடுத்துக்காட்டு என்றே கூறலாம்.
பல ஆண்டு காலமாக இப்பகுதியை கடும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது சுமதி வளவு. பேய்கள் குறித்தும் அமானுஷ்யங்கள் குறித்தும் பல வகையான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் மக்கள் இவ்வாறு அச்சப்படுவது சரியானதல்ல என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தனியாக காட்டுப்பகுதிக்குள் செல்வது ஒரு விதமான திகிலான அனுபவம் என்றும், இப்பகுதியில் இருக்கும் மரங்களின் சத்தம் கூட மக்களுக்கு யாரோ அழுவது போல கேட்கலாம் என்றும் கூறுகின்றனர்.
பேய்கள் குறித்த பயத்திற்கு பாதிப்படைந்த மக்கள் பெரும்பாலும் பேய்கள் குறித்த அளவுக்கு அதிகமாக நினைப்பதுண்டு. இதற்கு அவர்களிடமே இருக்கும் மன அழுத்தம், சோர்வு, தனிமை உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சுமதி வளவு பகுதியில் பலவிதமான மந்திரங்கள் பூஜைகள் செய்த போதிலும் அந்த பேயின் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் அச்சம் கொள்கின்றனர்.
வேலை விஷயமாக இரவு நேரங்களில் சுமதி வளவு பகுதிகளில் சென்ற பலர் தங்களது வண்டியின் டயர் திடீரென்று பஞ்சர் ஆனது என்றும், விளக்கு எரிந்து அனைவதாகவும், யாரோ ஒரு பெண் அழுவது போன்ற சத்தம் கேட்பதாகவும் கூறுகின்றனர். மேலும் சிலர் ஒரு படி மேலே சென்று வெள்ளை நிற உருவம் இருப்பதாகவும், தங்களது வண்டியில் அமர்ந்து கொள்வது போல் உணர்வதாகவும் தெரிவித்தனர்.
சுமதி பேய் தான் இதுவரை பல விபத்துகளை அப்பகுதியில் ஏற்படுத்தியதாகவும், பல மக்களின் உயிரை காவு வாங்கியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் சுமதி வளவு பகுதியில் செல்வதற்கு அச்சமடைந்துள்ளனர். பொதுவாக இரவு நேரத்தில் தான் அனைவருக்கும் பேய் பயம் ஏற்படும். ஆனால் பகல் நேரங்களிலும் கூட சுமதி வளவு பகுதியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.
இப்பகுதி மக்கள் மந்திர தந்திரங்களுக்கு பெயர்பெற்ற கேரளாவில் பேய்கள் குறித்து குட்டிச்சாத்தான் குறித்து நிறைய விஷயங்கள் பேசப்பட்டு வந்தாலும், இதில் மிகவும் முக்கியமாக பார்க்கப் படுவது சுமதி வளவு பேய்தான். திருவனந்தபுரத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் நெடுமங்காடு பகுதியில் இருக்கும் ஒரு சாலை வளைவு தான் சுமதி வளவு. வளவு என்ற சொல்லுக்கு தமிழில் வளைவு என்று பொருள்.
சுமதி வளவு பகுதியில் இரவு பத்து முப்பது மணிக்கு மேல் ஆள் நடமாட்டம் முற்றிலும் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கான காரணமாக இப்பகுதி மக்கள் கூறுவது இளம்பெண்ணின் பேய் என்ற சுமதி. சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னர் ஆக 18 வயது இளம்பெண் சுமதியை காதலித்த காதலன் இந்த இடத்தில் வைத்து கொடூரமாக கொன்றதாக கூறப்படுகிறது. மேலும் பெண்ணை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாகி, மரத்தில் கட்டி வைத்து கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
கொடூரமான முறையில் உயிரிழந்த அந்த பெண்ணின் ஆத்மா அந்த இடத்தில் இன்னும் உலா வந்து கொண்டிருப்பதாக அங்கு செல்லவே அச்சபடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடவுளின் சொந்த தேசம் என்று அழைக்கப்படும் கேரளா. இயற்கை மற்றும் ரம்மியமான சூழலுக்கு எப்படி பெயர் பெற்றது. இதேபோல மாந்திரீக, தாந்திரீகம்களுக்கும் புகழ் பெற்றுள்ளது என்று சொல்லலாம்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து கூட மக்கள் கேரளாவிற்கு சென்று மாந்திரீக மற்றும் பில்லி சூனியங்களை அகற்றி கொள்வார்கள். இயற்கை எழில் கொஞ்சும் காட்டுப் பகுதியில் தனி இடமாக அமைந்து இருக்கும். சில மந்திர கூடங்களும் நமக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாகவே தோன்றும். மர்மம், பேய் கதை, திகில் உணர்வு இவையெல்லாமே நமக்கு அச்சம் கலந்த ஆர்வத்தை ஏற்படுத்துவன. பேய் குறித்த பயம் பெரும்பாலான மக்கள் பகுதியில் இருந்தாலும், இதனை வெளியில் காட்டிக் கொள்வது ஒரு சிலரே. நகர்ப்புறங்களில் செல்லப்படும் கிராமங்கள் மற்றும் காட்டுப் பகுதிகளில் பேய் கதைகள் மற்றும் மத நம்பிக்கைகள் ஒன்றும் புதிதல்ல.