ஆன்மிகம்ஆலோசனை

நவகிரகம் தோஷங்களிலிருந்து விடுபட நவகிரகங்களை வழிபடும் போது..!!

கோவிலுக்கு சென்று நவகிரகங்களை வழிபடும் போது குறிப்பாக நவக்கிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும். என்ற தவறான கருத்து மக்களிடையே பரவி வருகிறதது வருகிறது.

சூரியன், சந்திரன், செவ்வாய் புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே இந்த ஏழு கிரகங்களை வலமாக சுற்ற வேண்டும் என்றும், ராகுவும் கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை எனவே அடுத்த இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்ற வேண்டும் என்றும், இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

ஆனால் இது தவறான கருத்தாகும். எனவே இடம் வளம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியது இல்லை. நவக்கிரகத்தை ஒன்பது முறை சுற்றினால் போதுமானது. அதே போல் எல்லா தெய்வங்களையும் வணங்கி விட்டு கடைசியாக நவக்கிரகங்களை சுற்றி வருவது தான் சரியான முறையாகும்.

எந்த கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது என்பது ஐதீகம். ஒவ்வொருவருடைய பூர்வ புண்ணியத்தின் படி அவரவர் ஜாதகத்தில் கிரக நிலை அமைந்திருக்கும். எல்லோருக்கும் ஜாதகத்தில் நவ கிரகங்கள் எல்லாமே சாதகமாக அமைந்து இருக்க வாய்ப்பு இருக்காது.

இதனால் நவகிரகம் தோஷங்களிலிருந்து விடுபட கோயிலை நோக்கி புறப்படுகிறோம். அங்கு சென்று வழிபட்டு திரும்பும் போது மன நிம்மதி கிடைக்கிறது. அப்படி கோவிலுக்கு சென்று நவகிரகங்களை வழிபடுவதில் இன்னமும் பல்வேறு விதமான குழப்பங்களும், சந்தேகங்களும் பக்தர்களிடையே நிலவி வருகிறது.

சூரியன் ஆரோக்கியத்தையும், மங்களத்தையும் கொடுக்கக் கூடியவர். சந்திரபகவான் ஒருவர் வாழ்வில் புகழைப் பெற்றுத் தருபவர். செவ்வாய் பகவான் தைரியத்தை கொடுக்க கூடியவர். புதனை வழிபடுவதால் ஞானமும், அறிவும் பெருகும், நல்ல புத்தி கிடைக்கும்.

குருபகவானை வணங்குவதால் புத்திர பாக்கியம், செல்வ வளமும் அமையும். சுக்கிரனை வணங்குவதால் வீடு மனை வாங்கும் யோகம், நல்ல மனைவி குடும்பம் அமையும். சனி பகவானை வழிபடுவதால் ஆயுள் பலம் பெறுவதுடன், சனி தோஷம் நிவர்த்தி ஆகும்.

ராகுவை வணங்குவதால் பயணங்களில் நன்மை உண்டாகும். கேதுவை வணங்குவதால் ஞானம் பெருகும். உற்றமும், ஆன்மீகத்தில் மேன்மை அடைவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *