Videosசினிமா

வா ரே வா ஃப்ரெண்ட்ஷிப் டே ஸ்பெஷல்

ஃப்ரெண்ட்ஷிப் டே ஸ்பெஷல் என்ன தெரியுமா? ‘நன்பன் ஒருவன் வந்த பிறகு’. என்னடா இது பாடல் வரி சொல்றேன்னு பாக்குறீங்களா! அது ஒரு படத்தோட பேருங்க. நண்பர்கள் தினத்தை முன்னிட்டு படத்தோட ஃபர்ஸ்ட் லுக்கையும் ஒரு குட்டி வீடியோவையும் வெளியிட்டு இருக்காங்க இந்த படத்தோட குழுவினர்.

நன்பன் ஒருவன் வந்த பிறகு

அனந்த் ராம் இயக்குனராக களமிறங்கி இருக்கும் முதல் படம் இதுதான்ங்க. ஹிப்ஹாப் ஆதி யோட சகோதரரா மீசைய முறுக்கு படத்துல வந்தவரு அனந்த் அப்பவே படம் இயக்க முடிவு செஞ்சுட்டாரு. பல படங்கள்ல துணை நடிகராக நடிச்சிருக்காரு அனந்த் ராம்.

நண்பர்கள் படம்னா ஒரு ஹீரோ ஹீரோயின் இருந்தா எப்படிங்க! கூட்டமா வராங்க நண்பர்கள். அந்தக் கூட்டத்தில் குமாரவேல், பவானி ஸ்ரீ, ஆர்.ஜே.விஜய், மோனிகா, வில்ஸ்பாட், இர்பான், சபரிஷ் மற்றும் ஆர்.ஜே.ஆனந்தி இவங்க எல்லாம் இருக்காங்க.

ஒயிட் ஃபெதர்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் இந்த படத்தோட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன்ங்க. நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இன்றைக்கு இணையதளத்தில் ட்ரெண்ட் செஞ்சு இருக்காங்க.

நன்பன் ஒருவன் வந்த பிறகு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ல சென்னைக்கு அடையாளமாய் இருக்கிற மெரினா பீச்சும் அந்த லைட் ஹவுசு ஒரு பக்கமும் இன்னொரு பக்கம் வேறு ஒரு நாடு சான்பிரான்சிஸ்கோவின் சுதந்திர தேவி சிலை இத ரெண்டையும் இனைக்கிற மாதிரி ஒரு பிரிட்ஜ் போகுதுங்க. ஒருவேளை கதைத் தளம் இரண்டு நாடுகளிலையும் நடக்குதோ!

அதோடு இந்த படத்தோட ஆரம்ப வீடியோவையும் வெளியிட்டு இருக்காங்க இந்த படத்தோட குழுவினர். ஒயிட் ஃபெதர்ஸ் ஸ்டுடியோஸ் வெளியிட்டிருக்கும் இந்த காணொளியில எல்லா நடிகர்கள் இயக்குனர்கள் படத்தோட குழுப் பட்டாளம் பட்டையக் கிளப்புறாங்க. ஆதியும் டில்லி பாபு வந்து விழாவ சிறப்பிச்சு இருக்காங்க.

கொரோனாவுக்கு முன்னாடி எடுக்கப்பட்ட வீடியோவ தான் நம்ம இப்ப பார்க்கிறோம். இந்த படம் 30% முடிந்த படில இருக்க ஊரடங்கு முடிஞ்ச உடனே ஒரே அடியா மீதமுள்ள 70% முடிக்க தயாரா இருக்காங்க இந்த படத்தோட குழுவினர்.

இப்படி ஃப்ரெண்ட்ஷிப் டேவ நாடே கோலாகலமாக கொண்டாடிட்டு இருக்காங்க உங்க பிரண்டுக்கு நீங்க வாழ்த்துக்கள்ல சொல்லிட்டீங்களா மக்களே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *