கல்லூரி படிப்புகளுக்கு இலவச டேட்டா வழங்கும் திட்டம்
கொரோனா தொற்றினால் தமிழகம் முழுவதும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைனில் படிக்கும் மாணவர்கள் எல்லோருக்கும் சூழலை சமமாக உருவாக்குவதற்கு ஜனவரி முதல் ஏப்ரல் 2021 வரை 2 ஜிபி டேட்டா தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளன.

இத்திட்டம் செயல்படுவது எப்படி? யார். யார் பயனடைவார்கள் என்பதைப் பற்றி கூறியுள்ளது. 2ஜிபி டேட்டாவை ஒருநாளைக்கு நிர்ணயிக்கும் விலையை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல், வோடாபோன், ஐடியா, ரிலையன்ஸ், ஜியோ, பார்த்தி ஏர்டெல் போன்றவற்றுக்கு தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொள்ள உள்ளன.
பிரத்தியேகமாக இணையத்தளம் ஒன்று இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ள ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் தொலைபேசி எண், ஆதார் கல்லூரி, அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு போன்ற விபரத்தை பதிவு செய்து கொள்வதற்கான வசதிகள் செய்யப்படும்.

கோரிக்கை ஏற்கப்பட்ட பிறகு அரசிடமிருந்து தொலைபேசி எண்ணிற்கு மாணவர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். மாணவர்கள் அனைவருக்கும் ஆறு மாதங்களுக்கு 100 கோடி ரூபாய் வரை மொத்த செலவு செய்யப்படுவதாக திட்டமிடப்பட்டுள்ளன.