உணவு பொருட்கள் விற்பனையில் கடுமையாக பாதிப்பு
ஊரடங்குக்கு முன்பு இருந்து சமையல் எண்ணை மற்றும் தினசரி டன் கணக்கு சேல்ஸ் ஆகிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு மாதமும் நான்கு லிட்டர் என்னை வாங்கிக் கொண்டிருந்தவர்கள் இரண்டு அல்லது மூன்று லிட்டர் தான் தற்போது வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அதே போல் காய்கறி விற்பனையும் வெகுவாக குறைந்து வருகிறது. பொருள் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் தொடர்ந்து நீடித்து வருவதால் வேலை வாய்ப்பை மக்கள் இழந்துள்ளனர்.
பொருளாதார ரீதியாக நலிவடைந்தனர். உணவு பொருட்கள் விற்பனையில் கடுமையாக பாதிக்கப்பட்டது. கிச்சடி சம்பா, பொன்னி மாதிரியான உயர்ரக அரிசிகளின் சேல்ஸ் குறைந்து விட்டன.
சாதாரண அரிசி தான் தற்போது அதிகம் சேல்ஸ் ஆகிறது என்ற தகவல் வெளியானது. சிலர் நிவாரணமாக கொடுத்த ரேஷன் அரிசியை சாப்பிட தொடங்கி விட்டனர்.
சமூகத்தில் என்ன மாற்றம் நடந்தாலும் அது உடனடியாக உணவுச் சந்தையில் தான் பிரதிபலிக்கும். தற்போது குறைவான பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில் உணவுப் பொருட்களின் தேவை மற்றும் விற்பனை எப்படி இருக்கிறது என்பதை பார்த்தோம்.
கருவாடு அதிகம் விற்பனை ஆனால் நாட்டில் பஞ்சம் நெருங்கிக் கொண்டிருப்பதாக கிராமங்களில் ஒரு பேச்சுவழக்கு இருப்பதுண்டு. இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டு இருப்பதாலும் விலைவாசி உயர்ந்து இருப்பதாலும் கருவாடு சேல்ஸ் அதிகமாக உள்ளன.
பொது முடக்கம் காரணமாக ஏற்படும் வறுமை அன்றாட வியாபாரத்தை பொதுமக்களை அதிக அளவில் மிகப்பெரிய அளவில் பாதித்துள்ள நிலையில், இதிலிருந்து எப்பொழுது மீண்டு வருவோம் என்ற அனைவருக்கும் எதிர்பார்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.