உங்களுக்கு நீங்களே ஆப்பு வைக்க வேண்டாம் கவனம்.!
நம்மில் பலர் நம் உடம்பில் சிறு உபாதைகள் தென்பட்டால் பயந்து அதை சரி செய்வதற்காக மருந்து கடைகளில் காரணத்தைச் சொல்லி மருந்துகளை வாங்கி முழுங்கி விடுகிறோம். இது எவ்வளவு பெரிய ஆபத்தான விஷயம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். முதலில் நீங்கள் ஒரு மாத்திரையை வாங்கும் போது எந்த மருந்தையும் நீங்களாக பார்த்து காலாவதி தேதி சரிபாருங்கள்.
தயாரித்த தேதி
சில மாத்திரைகள் 18 மாதங்கள் 24 மாதங்கள் தயாரித்த தேதியிலிருந்து என போட்டிருப்பார்கள் அதையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஒரே வகையான மருந்து மாதம் ஒரு கம்பெனியும், மற்றொரு மாதம் இன்னொரு கம்பெனியும், ஆண்டு கழித்து காலாவதி தேதியை குறித்து கவனிக்காமல் வாங்கக் கூடாது.
விஷமாக மாறி விடும்
மருந்து தயாரிக்கும் முறை மருந்து பொருட்கள் பொருத்து கம்பெனியின் பெயர் மாறக் கூடும். இதை வைத்து நீங்களே ஒரு முடிவுக்கு வர வேண்டாம். சில மருந்துகள் எடுத்துக் கொண்டால் அது விஷமாக மாறி விடும். மருந்தின் பெயர் மருத்துவப் பொருட்களின் பெயர் தயாரித்த கம்பெனியின் பெயர். விற்கும் கம்பெனியின் பெயர்.
மருந்தின் அளவு மருந்து தயாரித்த தேதி காலாவதி தேதி ஆகியவற்றை முழுமையாக மாத்திரை வாங்கும் போது கவனித்து வாங்க முடியும். எனவே கூடுமானவரை உதிரியாக மாத்திரை வாங்குவதை தவிர்த்து விடுங்கள். உதிரி மாத்திரைகள் காலாவதி மாத்திரைகளாக கூட இருக்கக் கூடும். எனவே கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
வீரியத்தின் அளவு பார்த்து வாங்க வேண்டும்
வீரியம் இல்லாமல் காரியம் இல்லை. மாத்திரை பெயர் பார்த்து வாங்கும் போது அதன் அளவு 5, 10 மில்லி என வீரியத்தின் அளவு பார்த்து வாங்க வேண்டும். இது மிக முக்கியம் இல்ல. மருந்து மருந்து அல்ல. இங்கே வாங்கினாலும், எவ்வளவு வாங்கினாலும், எவ்வளவு அவசரம் ஆனாலும், பில் இல்லாமல் மருந்துகளை வாங்காதீர்கள். பில்லில் உங்கள் பெயர், மருத்துவரின் பெயரும் இருக்கட்டும்.
மருத்துவரின் மருந்துச் சீட்டை வைத்து கவனமாக சரி பார்த்து வாங்க வேண்டும். சந்தேகம் இருக்கும் பட்சத்தில் இது பற்றி மருத்துவரிடம், அவரது உதவியாளரிடம் பரிசோதித்துக் கொள்ளுங்கள். மொபைல் போனில் மருந்து சீட்டு நீண்ட காலத்திற்கு சாப்பிட வேண்டிய உயிர்காக்கும் மருந்துகளின் அளவு போன்றவற்றை எழுதி பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதை வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்தி வைக்க வேண்டும். அவசர சிகிச்சை அளித்த மருத்துவர் கேட்கும் போது இது உயிர் காக்க உதவியாக இருக்கும். பெரும்பாலான மருத்துவர்கள் தங்கள் மருந்து சீட்டை தெளிவாக தனித்தனியாக பெரிய எழுத்துக்களில் தான் எழுதி தருகின்றனர்.
இடைவெளியில் மருத்துவரை பார்ப்பது அவசியமாகும்
சில கம்ப்யூட்டர் மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட மருந்து சீட்டை கொடுக்கிறார்கள். கையெழுத்து புரியவில்லை என்றால் கேட்டு விடுங்கள். சிலர் பழைய பில்லை வருடக் கணக்கில் வாங்குவதும் தவறு. குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரை பார்ப்பது அவசியமாகும். சீட்டு இல்லாமல் வாங்காதீர்கள்.
அக்கறை அவசியம்
தமிழ் சினிமாவில் பிரபல வசனங்களில் ஒன்று யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும். யார் வெட்டினாலும் மருந்து, டாக்டர் எழுதிக் கொடுத்தால் என்ன? கடைக்காரர் கொடுத்தால் என்ன? என்று நினைப்பவர்கள் பலர் உண்டு. அது உண்மை அல்ல. குடும்ப மருத்துவருக்கு கொடுக்கும் பணம். உங்கள் உடல் நலத்திற்கான முதலீடு என்பதை உணருங்கள்.
நீங்கள் சரியான மருத்துவரிடம் ஐம்பது, நூறு ரூபாய் கொடுத்தால், அவர் குறைந்தது ஐந்து மடங்கு பணம் மிச்சப்படும் வேலையைச் செய்வார். மருந்து வாங்கும் போது மேற்கூறிய விஷயங்களை அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இது உயிர் பற்றிய விஷயம் எனவே அக்கறை அவசியம்.