வண்ண மலர்களால் மின்னும் சிங்காரச் சென்னை
முத்தமிழறிஞர் கலைஞரின் 90 ஆவது பிறந்தநாள் ஜூன் 3 அன்று பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. அவரின் பிறந்த நாள் தினத்தில் சென்னையிலேயே முதன்முறையாக மிக பிரம்மாண்டமான அனைவரும் வியக்கும் வகையில் நம் வரலாற்றை சொல்லும் விதமாக சென்னை கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சி தொடங்கப்பட்டது ஜூன் 3 2022 தொடங்கிய மலர் கண்காட்சி ஆனது ஜூன் 5 2022 ஆம் தேதி வரை மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது…
ஊட்டி கொடைக்கானலுக்கு இணையாக அதைவிட மிக சிறப்பாக இந்த மலர் கண்காட்சி அமைந்துள்ளது.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மலர் கண்காட்சியில் ஊட்டி கொடைக்கானல் கிருஷ்ணகிரி போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து 4 லட்சத்திற்கும் அதிகமான அரிய வகை மலர்கள் இடம்பெற்றுள்ளது..
ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான், விலங்குகள் ,பறவைகள், கபிலரின் குறிஞ்சி மலர்கள், தேச தலைவர்களின் உருவங்கள், பார்வையாளர்களை ஈர்க்கும் வண்ணம் பலவிதமான அலங்கார பொருட்கள் போன்றவை இடம் பெற்றுள்ளது.
இந்த மலர் கண்காட்சியை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்..
நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 20 ரூபாயும் பெரியவர்களுக்கு 50 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது…
சென்னையில் இது போன்ற பிரமாண்டமான அனைவரையும் வியக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் வெளி மாவட்டங்களில் இருந்து கூட வந்து பார்த்து ரசித்து வருகின்றனர் .குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் மலர் கண்காட்சியில் புகைப்படம் எடுத்து கொண்டாடி வருகின்றனர்… கலைஞரின் 99 வது பிறந்த நாளில் சென்னையே வியக்கும் வகையில் அமைந்த இந்த மலர் கண்காட்சி மிகப்பெரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது