ஆரணி ஆற்றில் பிச்சாட்டூர் அணை திறப்பால் வெள்ளப்பெருக்கு
ஆந்திரா செல்லும் தரை பாலம் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பிச்சாட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. மக்கள் கவனமாக, பாதுகாப்போடு இருக்க பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளனர்.
- பிச்சாட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.
- ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன.
- மக்கள் கவனமாக, பாதுகாப்போடு இருக்க பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளனர்.
பிச்சாட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது
முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் 40 கிலோ மீட்டர் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் 8 ஆயிரம் கன அடி நீர் வினாடிக்கு பிச்சாட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. பிச்சாட்டூர் அணையில் இருந்து 11 ஆயிரம் கன அடி ஆரணி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள பகுதிகளில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன.
திருவள்ளுவர் மாவட்டம் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மொத்த உயரமான 33 அடியில், தற்போது 29 அடி நீர் நிரம்பின. வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அங்குள்ள நகரத்துக்கு மக்கள் 40 கிலோமீட்டர் சுற்றி திருவள்ளூர் சென்று அங்கிருந்து ஊத்துக்கோட்டை வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன.
ஆரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது
ஆரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு திருவள்ளூர் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஆங்காங்கே மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக வருவாய் காவல்துறையினர் தீயணைப்புத் துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது.
பிச்சாட்டூர் அணையில் இருந்து கூடுதலாக நீர் திறக்க இருப்பதால் ஆரணி ஆற்றின் கரையில் இரு புறங்களில் உள்ள கரையோர மக்கள் கவனமாக, பாதுகாப்போடு இருக்க பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.