அம்மன் அருள் தரும் முதல் ஆடி வெள்ளி
இன்று சிறப்பாக ஆடி வெள்ளி பூஜைகள் நடைபெற்று வருகின்றது. முதல் ஆடி வெள்ளி என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் சன்னதிகளில் பக்தர்கள் திரளாக கலந்து கலந்து கொண்டனர். ஆடி மாதம் கடந்த திங்கட்கிழமை அன்று தொடங்கியது.
ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை நாளான இன்று அனைவராலும் அம்மன் கோவில்களில் விழாக்கள் கொண்டாடி வருகின்றனர். அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவது மற்றும் பிரசாதம் பொங்கல் படையல்கள் செய்யப்படுகின்றன. அத்துடன் ஆடி மாதங்களில் காவல் தெய்வங்களான கருப்பசாமி மற்றும் உக்கிர தெய்வங்களான பத்ரகாளி ஆகிய தெய்வங்களுக்கு படையல்களும் செய்யப்படுகின்றன.
ஆரபிக்கலாமா விழா கொண்டாட்டங்களை
ஆடிப்பட்டம் தேடி விதைப்பது விவசாயிகள் வழக்கமாகும். ஆடி மாதம் தொடங்கியபின் விழாக்கள் வரிசையாக கியூ கட்டி வரும். ஆடி 18 , முன்னோர்கள் வழிபாடு செய்யும் ஆடி அமாவாசை, ஆவணி திருமண விழாக்கள் நிறைந்து இருக்கும். ஆடிபூரம் போன்ற விழாக்கள் பிரசித்திப் பெற்றுள்ளனர்.
ஆடி வெள்ளி விமரிசை
இன்று சதுர்த்தியுடன் கலந்த ஆடி வெள்ளி என்பதால் மக்கள் பக்தி பெருக்குடன் கோவில்களில் வலம் வருகின்றனர். ஆடி வெள்ளி நாட்களில் வீடுகளில் சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மஞ்சள், குங்குமம், வேப்பிலை, சிவப்பு, மஞ்சள் உடைகள் என பெண்கள் ஆடி மாதம் முழுவதும் மங்களகரமான உடைகளில் வலம் வருவார்கள்.
மேலும் படிக்க : ஆடிப்பெருக்கு 2022 செய்ய வேண்டிய முக்கிய வழிபாடுகள்
பக்தி நிறைந்த ஆடிவெள்ளி
வீடுகள் தோறும் இன்றைய காலங்களில் உணவு சமைப்பதில் அதிக அக்கறை காட்டப்படுகின்றன. கோவிலுக்கு பக்தர்கள் சிறப்பு பிரசாதத்திற்காகவும் வருகை புரிகின்றனர். மனது மற்றும் உடல் ஆரோக்கியம் சிறப்பு வரும் ஆடி வெள்ளிகளில் கோவில் சென்று இறை தரிசனம் பெறுவோம். ஆடி, மாதம் கூழ் ஊற்றலாம். மக்களுடன் இணைந்து ஆடி வெள்ளிகளில் பக்தி பரிமாற்றங்கள் செய்து கொள்ளலாம். இதன் மூலம் ஒற்றுமை மேலோங்கும் கூட்டு பிரார்த்தனைகள் வலுபெறும் இறைசக்தியை வெளிப்படுத்தலாம்.