சினிமா

பிரசன்னாவின் வெற்றியை கொண்டாடிய திரை உலகம்

திரையுலகமே கொண்டாடும் பிரசன்னாவின் பதினெட்டாவது வெற்றி வருடம். நடிகர் பிரசன்னா பல இளம் பெண்களின் மனதைக் கொள்ளை கொண்ட நாயகனாக 18 வருடங்களாக திரையுலகில் பயணிக்கிறார்.

பிரசன்னா

பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஃபைவ் ஸ்டார் படத்தில் 2002ல் அறிமுகமானார். அழகிய தீயே, கண்ட நால் முதல், சீனாதானா 001, சாதுமிரண்டா போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த பிரசன்னாவின் பயணத்தில் 2008 திருப்புமுனையாக அமைந்தது.

வில்லனாக பிரசன்னா

2008ல் நரேனுடன் இணைந்து நடித்த படம் அஞ்சாதே. பெண்களை கடத்தி கற்பழிப்பு செய்யுதல் என்ற சமூக அநீதியை காட்சிப்படுத்திய படத்தில் வில்லனாக நடித்தார் என்பதை விட கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் எனக் கூறலாம். மிஷ்கினின் இயக்கத்தில் வந்த அஞ்சாதே பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

வெளிநாட்டு அளவில் வெற்றி

2009ல் குழந்தைகளின் மீதான பாலியல் இச்சை பற்றிய படமான அச்சமுண்டு அச்சமுண்டு உள்நாட்டு திரையுலகில் ஏமாற்றத்தை அளித்தாலும் வெளிநாட்டு அளவில் பெரிதாக வரவேற்கப்பட்டது. இப்படத்தில் பிரசன்னா மற்றும் சினேகா இணைந்தனர்.

பட்டையை கிளப்பிய படங்கள்

நாணயம், பானா காத்தாடி, முரன், சென்னையில் ஒரு நாள், கல்யாண சமையல் சாதம், பா. பாண்டி, நிபுணன், துப்பறிவாளன், திருட்டுப்பயலே 2, காலக்கூத்து மற்றும் மாஃபியா அத்தியாயம்-1. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் வலம் வரும் நடிகர் பிரசன்னா.

18 வருடம்

பிரசன்னா திரையுலகில் 2002ல் அறிமுகமாகி 2020 வருடம் நடக்க 18 வருடங்கள் பயணம் நிறைவேறிய வெற்றி விழாவை இன்று சமூக வலைதளங்களில் ஹேஸ்டாகுடன் கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க : சினேகா பிரசன்னா வீட்டு வரலஷ்மி பூஜை

இந்த காணொளியை திரையுலக பிரபலங்கள் அவரவர் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து பிரசன்னாவை உற்சாகப்படுத்தி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ராதிகா சரத்குமாரின் பதிவை தொடர்ந்து பரத்தின் பதிவை காண்கிறீர்கள்.

ராட்சச நாயகன் விஷ்ணு விஷாலின் பகிர்வு இது.

மேல் மேலும் பல வெற்றி விழாக்களை கொண்டாட நடிகர் பிரசன்னாவிற்கு சிலேட்குச்சி வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.

மேலும் படிக்க : நெஞ்சம் ஒருமுறை… வசீகரா படம் பாடல் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *