அருள் தரும் சிவ பெருமான்..!!
ஒவ்வொரு மாதங்களிலும் வரும் விரதம் நாட்களில் பிரதோஷம், சிவன் ராத்திரி மிகவும் விசேஷமானது. பிரதோஷம் என்பது நாம் செய்த பாவங்களைப் போக்குவதற்காக இருக்கும் விரதம் ஆகும். சிவன் ராத்திரியில் இரவு விழித்திருந்து விரதம் இருப்பதால் நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் தூண்டப்பட்டு அதற்கான பலன்கள் முழுவதும் கிடைக்கும்.
மைத்ரேய முகூர்த்தம்
வருகின்ற வைகாசி 20 பிரதோஷம், சிவராத்திரி, மைத்ரேய முகூர்த்தம் ஒரே நாளில் வருவதால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இது 36 வருடங்களுக்கு ஒரு முறையே இப்படி வரும். இந்த மாதிரி வருகின்ற தினங்களில் என்னென்ன செய்தால் என்ன பலன் என்று நம் சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பாலோ பண்ணுங்க. மே 20 காலை இந்திய நேரப்படி விடியற்காலை 4. 24 முதல் 6.24 வரை மைத்ரேய முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் கடனை அடைக்க வேண்டிய தொகைக்கு உங்களால் முடிந்த அளவு 10 ரூபாய் மட்டுமாவது எடுத்து வையுங்க.
இதனால் கடன் விரைவில் அடைந்து விடும். இந்த பழத்தை யாருக்கு கொடுக்க வேண்டுமோ அவருடைய பெயரை மட்டும் எழுதி தனியாக அந்த பணத்துடன் எடுத்து வைங்க. இது அடுத்த ஒரு வருடத்திற்குள் அந்தப் பணத்தை அடைப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பது நம்பிக்கை.
பிரதோஷ வழிபாடு
மே 20 பிரதோஷம் அன்று காலை எழுந்தவுடன் குளித்துவிட்டு விரதத்தை தொடங்கினாள். இரவு வரை முழுவதுமாக விரதமிருக்கலாம். முடியாதவர்கள் காலை ஒரு நேரமாவது பழங்கள் உண்டு விரதமிருக்கலாம். அன்றைய தினம் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்த படியே இருக்க வேண்டும். மாலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு விரதமிருந்து பால் தயிர் அல்லது இளநீர் பன்னீர் பூக்கள் தேன் போன்ற அபிஷேகப் பொருட்களை கொடுக்கலாம்.
பிரதோஷ வழிபாடு என்பது வாழ்க்கையில் நமக்கு இருக்கும் திருமண தடை குழந்தைபேறு பாக்கியம் தொழில் வளர்ச்சி காரியதடை தீர, ஆகியவற்றையெல்லாம் பெற்றுத் தரும் ஆகவே பிரதோஷ காலத்தில் பக்தியுடன் பின்பற்றுவோம். சிவ புராணம் பாராயணம் செய்யலாம்.
சிவன் ராத்திரி
அடுத்த நாள் சிவராத்திரி அன்றும் விரதம் இருக்க முடிந்தவர்கள் முழுவதும் இருக்கலாம். காலை ஒருவேளை மட்டும் பழங்கள் உண்டு இருக்கலாம். சிவராத்திரி இரவில் ஓம் நமச்சிவாயா என்று சொல்வதால் உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் தூண்டப்பட்டு. நம் மனக் கஷ்டங்கள், குடும்ப கஷ்டங்கள், தொழில் நஷ்டங்கள் போன்ற ஐந்து சக்கரங்களைக் கொண்ட பஞ்ச சக்கரங்களால் ஏற்படக்கூடிய தாக்கத்தை குறைக்கும். சிவ புராணம் பாராயணம் செய்யலாம்.
பிரதோஷம் சிவன் ராத்திரி இரண்டு நாட்களுக்கு முன்பும் இரண்டு நாட்களுக்குப் பின்பும் உணவுகளை தவிர்த்திடுங்கள். கோவிலுக்கு செல்ல முடியவில்லை எனில் வீட்டிலிருந்த படியே விரதம் இருந்து, ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரித்த படியே வழிபாடு செய்யுங்கள். 36 வருடங்களுக்கு ஒருமுறை வருகின்ற இந்த அற்புத வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி வாழ்வில் வளமும் பெற்று வளமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.