ஆடி மாதம் அம்மன் அருள் கிடைக்கும் மக்களே….
ஆடி மாதம் வந்தாலே மக்களுக்கு மகிழ்ச்சி பொங்க செய்யும். அதுவும் ஆடிப்பட்டம் என்றால் விவசாயிகள் தேடி விதைப்பார்கள், ஆடிப்பட்டத்தில் அன்னை தேவி பராசக்தி அருள் அனைவருக்கும் கிடைக்க மக்கள் தாயை வேண்டி வணங்குவார்கள். ஆடி மாதம் செவ்வாய் வெள்ளியில் தேவி பார்வதியை வணங்குவது வழக்கமாக இருக்கின்றது. அன்னை பராசக்தி ஆடி மாதம் வணங்கி வரும் போது பேரருள் கிடைக்கும்.
ஆடி செவ்வாய் வழிபாடு
ஆடி செவ்வாய் முதல் வாரத்தில் அன்னை தேவியை வழிபட்டு வருதல் சிறப்பு தரும். ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் மற்றும் வேப்பிலை சாற்றி வணங்கி வருதல் என்பது வழக்கமாக இருக்கின்றது. ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும். நோய் பரவும் என்பதால் வேப்பிலை எல்லா வீடுகளிலும் இருக்கும். மேலும் வெள்ளி, செவ்வாய் நாட்களில் தேவி சன்னதியில் பெண்கள் சிறப்பு அபிஷேகங்கள் வளையல் அலங்காரங்கள் செய்து தாயவளுக்கு கூழ் படைத்து வணங்குவார்கள். இன்றும் இது வழக்கில் இருந்து வருகின்றது.
என்னதான் நாம் டெக்னாலஜியில் டெவில்களாக இருந்தாலும் ஆடி மாதம் இது அனைவரும் அன்னையவலை வழிபட்டு அவள் அருள் கிடைக்க பெறுவோம். அனைவரது உடல் நலம் மனநலம் பெருகி செல்வ வளம் பொங்க உற்றார் உறவினருடன் இயற்கை நலமுடன் இணைந்து வாழ்வோம்.
மேலும் படிக்க : வருடப்பிறப்பின் அர்த்தமும் அதன் கொண்டாட்டமும் அறிவோமா!