விவசாயிகளுக்கு வாரி வழங்கப்பட்ட சலுகைகள்
கோவித் சிக்கலில் இந்தியா இருக்கும்பொழுது இந்தியாவின் பொருளாதாரம் அதளபாதளத்தில் விழுந்து கிடக்கின்றது. இத்தகைய நேரத்தில் நமக்கு உணவு என்பது அவசியமானது ஆகும் உணவு அவசியம் என்றால் விளைச்சல் அவசியம் ஆகின்றது. விளைச்சலுக்கு இந்திய விவசாயிகளுக்கு உதவ வேண்டும். இந்தியாவில் கொரானாவால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்து கிடக்கின்றது. மக்களைக் காக்கவும் அவர்களுக்குத் தேவையான உணவுப் பண்டங்களை வழங்க அரசு நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இந்திய கோவித்-19 பொருளாதார அறிவிப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு வாரி வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள விவசாயிகள் பண்ணை வாயில் உள்கட்டமைப்புக்காக அரசு ரூபாய்.1 லட்சம் கோடி விவசாய நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. குளிர்கால சங்கிலிகளை அமைப்பதற்கும் பயிர்களின் அறுவடைக்கு பிந்தைய மேலாண்மைக்கும் இது பயன்படுத்தப்படும்.
மூலிகை சாகுபடியை ஊக்குவிக்க, ரூபாய்4,000 கோடி தேசிய அறிவிக்கப்பட்டுள்ளது. மூலிகை பயிர்கள் சுமார் 10 லட்சம் ஹெக்டர் பரப்புக்கு இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.
தேனீ வளர்ப்பவர்களுக்கு, ரூபாய்.500 கோடி திட்டம் அறிவிக்கப்பட்டது. மீனவர்களுக்கு ரூபாய்.20,000கோடி வழங்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி மத்ஷ்ய சம்பத் யோஜ்னாவின் கீழ் கடல் பகுதி முன்னேற்றத்திற்கு வழங்கப்படுகின்றது.
ஆப்ரேஷன் பசுமைபுரட்சியானது விரிவுப்படுத்தப்பட்டு தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு, மற்ற பழங்களை ஆகிய அனைத்தும் அறுவடைக்குப்பின் பாதுகாப்பு செய்ய 50% விகித மானியம் வழங்கப்படுகின்றது.
ரூபாய்.15,000 கோடி கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டாட்டுக்கு தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் ரூபாய் 13,343 கோடி தொகையானது ஆடு, மாடு, எருமை, போன்றவற்றிற்கு வேக்சின் வழங்கப்பட்டுள்ளது.
இது போன்ற திட்டங்களால் விவசாயிகள் மிகுந்த பயனைப் பெறுவார்கள். அவர்களின் இடையூறுகள் குறைக்கப்பட்டு அறுவடை சிறப்பாக நடைபெறும் உணவு பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பு செய்ய முடியும். உற்பத்தி அதிகரிக்க நாட்டின் உணவு பொருட்களின் தேவையை நிறைவு செய்ய முடியும். இதனை அரசு நங்கு உணர்ந்துள்ளது. அதே நேரத்தில் மக்களுக்கு உணவுப் பொருட்கள் விலைத்தட்டுபாட்டை குறைக்க முடியும். அதிக உற்பத்தி அவசியமாகும். அதன் மூலம் வரும் காலத்தை நாம் காக்க முடியும்.
கோவித்-19 நாட்டில் பெரும் அளவைப் பாதித்துள்ளது இருப்பினும் இதனை முழுமையாக நம்மால் கட்டுப்பட்டுத்த வேண்டுமெனில் நாட்டில் மக்களின்
மேலும் படிக்க: புது அறிவிப்புகளால் தெறிக்கவிட்ட நிர்மலா சீதாராமன்..!!