செய்திகள்

மக்களே உஷார்!!!

காய்ச்சலை விரட்டுவேன் என்று சுய விளம்பரம் செய்து போலீஸ் பிடியில் சிக்கியுள்ள கைராசி மருத்துவர் மாதவன்.   

    ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூரில்  சக்தி ஹெல்த் கேர் என்ற பெயரில் கிளினிக் ஒன்றை மருத்துவமனை போலவே நடத்தி வந்தவர் இவர். காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி விளம்பரம் செய்து வருவதாக தகவல் வெளியானது. சாதாரண சளி, காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் கொரோனாவின் அறிகுறிகள் என பயமுறுத்தி அதில் கட்டணமாக 400 முதல் 500 ரூபாய் வரை பணம் வசூலித்துக் கொண்டு, பரசிட்டமோல் (paracetamol) மாத்திரை கொடுத்து வருவதாக புகார் எழுந்தது.  

    பரசிட்டமோல் மாத்திரை கொரோனா காய்ச்சலை விரட்டும் என்று கூறிய அந்த போலி மருத்துவரை ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் அனைத்து மருத்துவமனைகளுக்கான தொடர்பு அதிகாரி ஐயப்பன் பிரகாஷ் நேரடியாக சென்றார். அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் இவர் டாக்டர் அல்ல டுபாக்கூர் என்பது தெரியவந்தது.   இந்த போலி மருத்துவர் பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு மருத்துவக் குறிப்புகளையும் மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலி மருத்துவர் மாதவனை போலீசார் கைது செய்தனர். மேலும் போலி டாக்டர் மாதவன் நடத்தி வந்த கிளினிக்க்கும் சீல் வைக்கப்பட்டது.  

      சப்தமில்லாமல் நடத்தி வரும் போலி மருத்துவர்கள் பணத்தாசையில் தவறான ஊசி போட்டு புதியவர்களை வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலைக்குக் கொண்டு செல்வது இன்றுவரை தொடர்கிறது என்பதற்கு இந்த போலி மருத்துவர் சான்று.    

    மக்களே உஷார்…! இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கொரோனா உலகையே அச்சுறுத்தி வந்து கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் சுயநலமாக இல்லாமல், ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே இந்த கொரோனா வைரசை நாட்டில் இருந்து விரட்டியடிக்க முடியும்.   எதற்காக இப்படி ஒரு நாடகம்? போலி மருத்துவர் என்று தெரியாமல் மக்கள் இவரிடம் ஏமாந்து இருக்கிறார்கள், மக்களிடையே பீதியைக் கிளப்பி பணத்தாசையில் மக்களிடம் இருந்து அதிக பணத்தை வசூலித்து வந்திருக்கிறார் இந்த போலி மருத்துவர்.

 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *