உச்சகட்ட பதற்றம்:- இந்தியர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தல்
உக்ரைன் -ரஷ்யா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
உக்ரைன் -ரஷ்யா இடையே கடந்த சில மாதங்களாகவே பதற்றமான சூழல் நிலவுகிறது. ரஷ்யா தனது 1 லட்ச,ம் படை வீரர்களை உக்ரைன் எல்லை அருகே நிறுத்தியுள்ளது. மேலும் அங்கு கனரக ஆயுதங்களையும், நிலைநிறுத்தியுள்ளது ரஷ்யா.இந்நிலையில், ரஷ்யா அச்சுறுத்தல் காரணமாக உக்ரைன் நோட்டோவின் நட்பு நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி குவித்து வருகிறது. இதனால் அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.
மேலும் ரஷ்யா உக்ரைனை வரும் 16ம் தேதி தாக்கக்கூடும் என அமெரிக்கா உளவுத்துறையான சிஐஏ கூறி வருகிறது. இதனால் பாதுகாப்பு காரணமாக அமெரிக்கர்கள் உக்ரைன் செல்வதை தவிர்க்குமாறும், உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் தனது குடிமக்களை தனி விமானம் மூலம் தாயகம் அழைத்து வரும் என இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
இதனைதொடர்ந்து உக்ரைனில் உள்ள இந்தியர்கள், குறிப்பாக மாணவர்கள் தற்காலிகமாக உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறுமாறு உக்ரைனுக்கான இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், உக்ரைனுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் அமெரிக்கா பெலாரஸ் மற்றும் மால்டோவா நாட்டில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க அரசு இன்று அறிவுறுத்தியுள்ளது. தெற்கு உக்ரைன் வழியாக நகர்வை மேற்கொள்ள டிரான்ஸ்னிஸ்ட்ரியாவில் உள்ள ரஷ்ய துருப்புக்கள் முயலும் என கூறப்படுகிறது. (டிரான்ஸ்னிஸ்ட்ரியா – மால்டோவா நாட்டில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.