அகழாய்வு பணி கீழடி பழமையான பொருட்களை கண்டறியப்பட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருப்புவனம் அருகில் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி முதல் நடைபெற்று வந்தன. இந்த அகழாய்வு பணி கீழடி மற்றும் அகரம் கொந்தகை மணலூர் ஆகிய நான்கு இடங்களிலும் விரிவுபடுத்தப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வந்தது.
செங்கல் கட்டுமானம் இரட்டைச் சுவர் விலங்குகளின் எலும்பு, மனித எலும்புகள், மண் பானைகள், ஓடுகள், சிறிய உலைக்களம் உள்ளிட்ட பழமையான பொருட்களை கண்டறியப்பட்டு வருகின்றனர்.

அதில் அகரத்தில் ஆறு குழிகள் தோண்டப்பட்டு வந்தனர். இங்கு நீல வடிவ பச்சை நிற பாசிகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கீழடி பகுதியில் இதுவரை நடந்த அகழாய்வுகளில் வட்ட மற்றும் உருளை வடிவ பார்சிகள் மட்டுமே கண்டெடுத்தனர்.
முதன்முறையாக நீள வடிவப் பாசிகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் மாநிலத்தில் பயன்பாட்டிலிருந்து வந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த பாசிகள் வியாபாரிகள், செல்வந்தர்கள் கழுத்தில் அணிந்து உள்ளதாகவும், தொல்லியல் துறையினர்கள் தெரிவித்தனர். கீழடி மற்றும் அதனை சுற்றி நடைபெறும்.
அகழாய்வு இடங்களில் பல்வேறு பழமையான பொருட்கள் தமிழரின் பழமையை பாரம்பரியத்தை எடுத்துரைப்பதாக கிடைத்து வருவது ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாக தோன்றுகிறது.

மதுரை மாவட்டம் கீழடி யை சுற்றியுள்ள அகரம் அகழாய்வு நடைபெறும் இடத்தில் நீள வடிவ பச்சை வண்ண பாசிகள் கண்டெடுத்தது தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன
ஆறாம் கட்ட அகழாய்வு பணி விரிவுபடுத்தும் வகையில் சேதுராமு அம்மாள் என்பவரது நிலத்தில் தொல்லியல் துறை அகழாய்வு தொடங்கியுள்ளது. ஒரு ஏக்கரில் 3 குழிகள் முதல் கட்டமாக தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.