என்ன நினைச்ச நீ… சொக்கத்தங்கம்
சொக்கத்தங்கம் (Chokka Thangam) 2003 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பாக்கியராஜ். எழுதி இயக்கியுள்ளார். ஜி.வி நிறுவனம் சார்பில் ஜி.வெங்கடேஸ்வரன் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். விஜயகாந்த், சௌந்தர்யா பிரகாஷ் ராஜ், கவுண்டமணி,செந்தில், உமாஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்
என்ன நெனச்சே நீ என்ன நெனச்சே
என் நெஞ்சுக்குள்ள உன்ன வெச்சு தெச்ச போது
சொக்கித் தவிச்சேன் சொக்கித் தவிச்சேன்
நான் சொக்கத் தங்கம் கிட்டியதால் துள்ளிக் குதிச்சேன்
குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர
ஒன்ன நெனச்சேன் நான் ஒன்ன நெனச்சேன்
எந்தப் பூர்வ ஜென்ம புண்ணியமோ ஒன்ன அடஞ்சேன்
நாங்காடு சிற்பம் உன்னோட வெப்பம்
நான் தொட்டுப் பாக்குறப்போ என்ன நெனச்சே
தீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட
சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன்
உன் கன்னக் குழி முத்தம் வச்சேன் என்ன நெனச்சே
என் நெஞ்சுக் குழி மீதும் ஒண்ணு கேக்க நெனச்சேன்
என் பேராச நூறாச கேக்கையில்
அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சேடி
ஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும்
சொல்ல நெனச்சேன் நான் சொல்ல நெனச்சேன்
ஒன்ன ஒட்டு மொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்
அள்ள நெனச்சேன் நான் அள்ள நெனச்சேன்
ஒன்ன ஒட்டு மொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்
மெத்தைக்கு மேல உன்னோட சேல
என் கையில் சிக்கும் வேள என்ன நெனச்சே
எப்போதும் போல ஒன்னோட வேல
ஆரம்பமாச்சுதுன்னு நானும் நெனச்சேன்
மேலும் படிக்க : பாரதி கண்ணம்மா சீரியலுக்கு எண்டுகார்டு போட்டவர் யார்????
நீ உள் காயத்த பாக்குறப்போ என்ன நெனச்சே
நீ நகம் வெட்ட வேணுமுன்னு சொல்ல நெனச்சேன்
நாம் ஒண்ணோடு ஒண்ணாகும் நேரத்தில்
உன் பூந்தேகம் தாங்கும்னு நெனச்சையா
கல்யாண சொர்க்கத்துல கச்சேரி நேரமுன்னு
கட்டிப் புடிச்சேன் நான் கட்டிப் புடிச்சேன்
என் வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டிப் புடிச்சேன்
சொக்கித் தவிச்சேன் சொக்கித் தவிச்சேன்
நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளிக் குதிச்சேன்
குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர
ஒன்ன நெனச்சேன் நான் ஒன்ன நெனச்சேன்
எந்தப் பூரவ ஜென்ம புண்ணியமோ ஒன்ன அடஞ்சேன்
மேலும் படிக்க ; பீப் பாடல் விவகாரம் : ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!