எட்டாம் வகுப்பு படித்திருந்தால் அரசு வேலை
எல்காட் என்று சொல்லப்படும் தமிழ்நாடு எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் மக்களுக்கான வேலைவாய்ப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.
சென்னை நந்தனத்தில் இருக்கும் எல்காட் நிறுவனத்தில் மூன்று பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 19 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
எல்லா இடங்களிலும் நோய்த்தொற்று அதிகமாகி வர பண பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது இந்த நிலையில் எல்காட் அருமையான வேலை வாய்ப்பை வெளியிட்டுள்ளது.
சென்னைவாசிகளே நீங்கள் வாழும் பகுதியிலேயே வேலை கிடைக்கும் பாக்கியசாலியாக இருக்கிறீர்கள். விவரங்களைத் தெரிந்துகொண்டு நீங்கள் தகுதியானவராக இருந்தால் விண்ணப்பித்து வெற்றி அடையுங்கள்.
பணியிடங்கள்
தனியார் செயலாளர்-4
ஓட்டுனர்-5
அட்டெண்டர்-10
கல்வி தகுதி மற்றும் அனுபவம்
மூன்று பணிகளுக்கு வெவ்வேறு வரைமுறைகள் வகுக்கப்பட்டிருக்கிறது.
தனியார் செயலாளர்: பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும் மேலும் அரசு அங்கீகரிக்கப்பட்ட ஷார்ட் ஹேண்ட் மற்றும் டைப்ரைட்டிங்கில் ஹையர் கிரேட் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பொது அல்லது தனியார் துறையில் 3 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
ஓட்டுநர்: எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்த எடை வாகனத்திற்கான ஓட்டுதல் உரிமம் பெற்று 5 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
அட்டெண்டர்: எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
பணியிடங்களுக்கு ஏற்றவாறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வமான இணைய தளத்தை பார்க்கவும்.
சம்பள வடிவம்
பணிக்கு தகுந்தவாறு சம்பள வடிவம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் செயலாளர் மற்றும் ஓட்டுநருக்கு எட்டாம் நிலை சம்பள வடிவமும் அட்டெண்டரருக்கு ஒன்றாம் நிலை சம்பள வடிவமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
விண்ணப்பிக்க
எல்காட் நிறுவனத்தில் மேற்கூறிய பணியிடங்களில் பணிபுரிய இங்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை அச்சிட்டு நிரப்பி இந்நிறுவனத்தின் அலுவலகத்திற்கு தபால் செய்யவும். மேலும் விண்ணப்பத்தை கணினியிலேயே நிரப்பி அச்சிட வேண்டும்.
முக்கியமான தேதிகள்
அந்தத் தபால் 17-09-2020க்குள் அலுவலகத்தை அடைய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வமான இணைய தளத்தை பார்க்கவும்.
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு சிலேய்குச்சியின் வாழ்த்துக்கள்.