சண்டே ஸ்பெஷல் எக் சிக்கன் பெப்பர் சாப்ஸ்
சண்டே ஸ்பெஷல் ஆக சிக்கன், முட்டை, மிளகு வைத்து எளிமையாக ஈஸியா செய்யக் கூடிய டிஷ் இது எக் சிக்கன் பெப்பர் சாப்ஸ்.
எக் சிக்கன் பெப்பர் சாப்ஸ்
தேவையான பொருட்கள் : சிக்கன் அரை கிலோ, முட்டை 5, சின்ன வெங்காயம் 100 கிராம், இஞ்சி, பூண்டு 50 கிராம், காய்ந்த மிளகாய் 5, தனியா ஒரு ஸ்பூன், மிளகு 2 ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை தாளிக்க தேவையான அளவு. உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை விளக்கம் : சிக்கனை சுத்தம் செய்து மஞ்சள், உப்பு சேர்த்து இரண்டு மூன்று முறை நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி மஞ்சள் கருவை நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். தனியா, மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, வெங்காயம் ஆகியவற்றை வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த மசாலாவை இதனுடன் சேர்த்து சிக்கனை சேர்த்து சிறிது நீர் ஊற்றி வேக விட வேண்டும்.
தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். சிக்கன், மசாலாவும் சேர்ந்து கெட்டியானதும் வெட்டி வைத்த முட்டையையும் சேர்த்து கிளற வேண்டும். குறைந்த தீயில் வைத்து சில நிமிடங்கள் கழித்து கிளறி இறக்கினால் எக் சிக்கன் பெப்பர் சாப்ஸ் தயார்.